‘டிஸ்லெக்சியா’வைக் குறைபாடாகக் கருதாமல் சுயமுனைப்போடு படித்து ‘ஏ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி

சுதாஸாகி ராமன்

ஐந்து வயதில் வாசிக்­கத் தொடங்­கிய சக நண்பர்களைப் போலல்­லா­மல் எழுத்­து­களைக் கூட அடை­யா­ளம் காணச் சிர­மப்­பட்­டார் ஃபோஸ்­டீனா ஜாய்ஸ் ஃபெர்னான்டோ. இப்போது அவ­ருக்கு வயது 18. இன்ற­ள­வும் எழுத்­து­களை அடை­யா­ளம் கண்டு வார்த்தை­களைச் சரி­யா­கப் படிக்­க­வும் நீண்ட பத்­தி­களில் கொடுக்­கப்­பட்ட கருத்தைப் புரிந்­து­ கொள்­ள­வும் சிர­மப்­படுகிறார் அவர்.

இடமாறு தோற்றப் பிழை (டிஸ்­லெக்­சியா) எனப்­படும் ஒருவகை கற்றல் குறைப்­பாட் டுடன் பிறந்த ஃபோஸ்­டீனா, இன்னல்களைச் சமா­ளித்து, சென்ற ஆண்டு எழுதிய 'ஏ' நிலைத் தேர்­வு­களில் சிறப்­புத் தேர்ச்சி பெற்­றி­ருக்­கிறார். அறி­வி­யல் பாடங்களில் சிறந்த தேர்ச்சி பெறுவது கடி­ன­மாக இருக்­க­லாம். அவற்­றிற்­குப் பதி­லா­கக் கலைப் பாடங்களைப் படிப்­பது சிறந்தது என்ற ஆசி­ரி­யர்­களின் பரிந்­துரையை ஏற்றார். 'ஏ' நிலைத் தேர்வில் வரலாறு, ஆங்கில இலக்கியம், கணிதம் ஆகிய பாடங்களில் 'ஏ' தகுதி யும் பொரு­ளா­தா­ரப் பாடத்தில் 'பி' தகுதியும் பெற்றுத் தேர்ந்தார் ஃபோஸ்­டினா.

சில வார்த்தை­களைத் தவற விடுதல், வார்த்தை­களைத் தவறாக உச்­ச­ரித்­தல் போன்ற வற்றால் ஃபோஸ்­டீனா சிரமப் படு­வதைக் கண்ட அவரது தாயார், ஃபோஸ்­டீனா­வுக்கு 'டிஸ்­லெக்­சியா' இருக்­க­லாம் என்று சந்­தேகப்­பட்­டார். ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரிந்த அவரால் மகளின் பிரச்­சினையைச் சரி­யா­கப் புரிந்­து­கொள்ள முடிந்தது. ஃபோஸ்­டீனா­விற்கு இக்­குறை­பாட்­டினால் ஏற்­ப­டக் கூடிய சவால்­களைச் சமா­ளிக்க உதவும் நோக்கில் அவ­ருடைய பெற்றோர் அவரை இளம் வய­தி­லேயே சிறப்பு வகுப்­பு­களுக்கு அனுப்­பிவைத்­த­னர். இந்தக் குறை­பாட்டை ஒரு காரணமாகக் கொண்டு ஃபோஸ்­டீனா கல்­வி­யில் பின்­தங்கி விடக்­கூ­டாது என்பதை உறுதி செய்­வதற்­காக அவரது பெற்றோர் இது­பற்றி அவரது ஆசி­ரி­யர் களிடம் தெரி­விக்­க­வில்லை.

அதே சம­யத்­தில், ஃபோஸ் டீனா­வுக்கு அவரது பெற்றோர் கல்வி தொடர்­பான அழுத்­தம் எதுவும் கொடுக்­கா­மல் அவரால் முடிந்த­வரை படிக்க ஊக்கம் அளித்­த­னர். தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்­ணத்­தில் சுயமுனைப்­பு­டன் கடுமை­யாக உழைத்­தார் ஃபோஸ்­டீனா.

தந்தையார் ரெக்ஸ் ஃபெர்னான்டோவுடன் ஃபோஸ்டீனா ஜாய்ஸ் (வலது). படம்: ஃபோஸ்டீனா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!