தொட்டுவிடும் தூரத்தில் வெற்றிக்கனி; எட்டிப்பறித்த செல்வா

முஹம்­மது ஃபைரோஸ்

எதிர்­கா­லத்­தில் மருத்­து­வ­ராக வேண்டும் என்ற இலக்கு கொண்­டிருந்தாலும் அதற்கு அடிப்படைத் தேவையான உயி­ரி­யல் பாடத்தைக் கைவிடும் அள­வுக்கு சூழ்நிலை அரு­ணாச்­ச­லம் செல்­வ­நா­ய­கத்தை நெருக்­கி­யது. இருப்­பி­னும், மனந்தளராமல் அப்­பா­டத்தைத் தொடர்ந்து படித்து அதில் சிறப்புத் தேர்ச்­சியும் பெற்றிருக்கிறார் செல்வா. இந்த வெற்றியின் மூலம் தமது கனவை நோக்கி ஒரு படி முன்னேறியுள்­ளார் அவர். பொதுவாக, 'சிர­மம்' எனக் கருதப்­படும் பொதுத் தாளில் 'ஏ' தகுதி பெற்றது செயின்ட் ஆண்ட்­ருஸ் தொடக்­கக் கல்­லூ­ரி­ மாணவரான இவருக்கு மேலும் இன்ப அதிர்ச்­சியைத் தந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பொதுக் கல்விச் சான்­றி­தழ் மேல்­நிலைத் தேர்வில் செல்வா பயின்ற நான்கு 'ஹெச் 2' பாடங்களில் தமிழ்­மொழி இலக்­கி­யத்­தி­லும் ரசா­ய­னவி­ய­லி­லும் 'ஏ' தகுதி பெற்றார். கணி­தத்­தி­லும் உயி­ரி­ய­லி­லும் 'பி' தகுதி பெற்றார்.

ஏட்டுக் கல்­வி­யி­லும் இணைப்­பாட நட­வ­டிக்கை­களி­லும் சிறந்து விளங்­கினா­லும் இரண்­ டி­ற்கும் நேரத்தை வகுத்து, திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது கடி­ன­மாக இருந்த­தாக அவர் குறிப்­பிட்டார். ஒரு மாணவர் எவ்வாறு பல நடவடிக்கைகளில் ஈடு­பட்டு தலைமைத்­து­வப் பண்­பு­களை வளர்த்­துக் கொள்­கிறார் என்பது முக்­கி­ய­மாகக் கவ­னிக்­கப்­படு­கிறது என்றார் கல்­லூ­ரி­யின் இந்­தி­ய கலாசார மன்றத்­தில் தலைவர் பொறுப்பை வகித்­த செல்வா. மேலும், இந்­தி­ய கலாசார மன்றத்­தின் சார்பில் கல்­லூ­ரியைப் பிர­தி­நி­தித்து பல தமிழ்­மொ­ழி போட்­டி­களில் கலந்­து­கொண்­டு தமது தமிழார்வத்தையும் வளர்த் துக்கொண்டார் அவர். கடந்த ஆண்டு சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் நடைபெற்ற புகுமுக வகுப்பு கருத்­த­ரங்­கில் ஒருங்­கிணைப்­பா­ள­ராகச் செயல்­பு­ரிந்த செல்வா, தலைமைத்­து­வப் பண்­பு­களை வளர்த்­துக்­ கொள்ள பள்­ளி­யில் தங்கி பயிலும் திட்­டத்­தி­லும் பங்­கேற்­றுள்­ளார்.

"வெற்றி எவ்­வ­ளவு அருகில் இருக்­கிறது என்பது அதை அடையும் வரை தெரியாது," என்ற செல்வா, வாழ்க்கை­யில் பல சவால்­களைக் கடந்து வந்த பின்னர் இறு­தி­யில் வெற்றிக் கனியை சுவைக்­கும்­போது அதன் மதிப்பை நன்கு உணர முடியும் என்றார். "உயிரியல் பாடத்தில் சிறப்பாகச் செய்யக்கூடிய திறன் இருந்தும், என் மீது கொண்ட நம்பிக்கை தளர்ந்ததால், எதிர்காலக் கனவையே கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம். எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்துவிடக் கூடாது," என்று தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் செல்வா. எளிமை­யான குடும்பப் பின்­ன­ணி­யைக் கொண்ட அவர், தம்­முடைய கல்விப் பய­ணத்­தில் பெற்­றோ­ரும் அண்­ண­னும் உறு­துணை­யாக இருந்த­தாகச் சொன்னார். கணிதப் பாடத்­தில் தமக்குப் புரி­யா­த­வற்றை அண்­ண­னும் தந்தை­யும் மிகுந்த ஆர்வத்துடன் கற்­பித்­ததைச் சுட்­டிக் காட்டினார். தற்போது ராணு­வத்­தில் தேசிய சேவை புரியும் 18 வயது செல்வா, அடுத்து, மருத்­து­வம் பயிலத் திட்­ட­மி­டு­கிறார். ஆசிரியராகப் பணிபுரிவதிலும் தமக்கு ஆர்வம் உண்டு என்றார் செல்வா.

பெற்றோர், அண்ணனுடன் செல்வா (நீலநிறச் சட்டையில்). படம்: செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக்கல்லூரி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!