பெண்களைத் தெருவில் போராட வைத்த அரசு: கருணாநிதி புகார்

சென்னை: அதிமுக அரசு பெண்களைத் தெருவில் இறங்கிப் போராட வைத்தது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பெண்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் இயக்கம் திமுக என்று கூறியுள்ளார். "காவல் துறையில் பெண்கள் நியமனம், சுய உதவி குழுக்கள் தொடக்கம், மகளிருக்குச் சொத்துரிமை, அரசுப் பணிகளில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு, உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு எனப் பல்வேறு திட்டங்களைத் திமுக நடைமுறைப்படுத்தி உள்ளது. "மகளிர் சமுதாயம் கல்வி, அறிவியல், அரசியல் சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் கண்டு அவர்கள் வாழ்வு வளம் பெறுவதற்குப் பல வகையிலும் வழிவகுத்த பெருமை திமுக ஆட்சிக்கும் திமுகவிற்கும்தான் உண்டு," என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!