‘இ-புத்தக’ வடிவில் தமிழ் இலக்கியங்கள்

சென்னை: தமிழ் இலக்கிய நூல்களை இனி மின் புத்தக (இ- புக்) வடிவில் நமது கைபேசிக் கருவியிலேயே படிக்கலாம். இதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ள தமிழக அரசுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ் இணைய கல்விக் கழகத்தின் ஓர் அங்கமான கணித்தமிழ்ப் பேரவை, தமிழ் இலக்கிய நூல்களை மின் புத்தக வடிவில் கைபேசியில் படிக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. உலகம் முழுக்க வெவ் வேறு பகுதிகளில் வாழும் தமிழர் களுக்கும் தமிழை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள பிறருக்கும் இந்த வசதி வெகுவாகக் கைகொடுக்கும் என்கிறார் கணித்தமிழ்ப் பேரவை யின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப்பரிதி.

"தமிழ் சார்ந்த அறிவியல், தொழில்நுட்பம், தமிழ் கணினி மென்பொருள், தமிழர்களின் கலை, வரலாறு, இலக்கியம், கலா சாரம் முதலான துறைகளில் உள்ள வாய்ப்புகளையும், இணை யம் சார்ந்த பயனுள்ள தகவல் திரட்டுகளையும் தருவதற்கான தமிழக அரசின் முயற்சியே தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆகும். "அதன் மூலம் புதிய முயற்சியாக தமிழ் இலக்கிய நூல்களை மின் புத்தக வடிவில் தருகிறோம். இதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது," என்கிறார் தமிழ்ப்பரிதி.

நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், காப்புரிமை சிக்கல்கள் இல்லாத நூல்களை இனி கைபேசி வழி படிக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், இதற்காகக் கட்டணம் விதிக்கப்படவில்லை என்றார். "இப்புத்தகங்களை இலவசமாக படிக்கலாம். இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவை யில்லை. 6 ஆயிரத்துக்கும் மேற் பட்ட நூல்களை படிக்கலாம்," என்றார் தமிழ்ப்பரிதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!