இரண்டு வாரத்தில் பதிலளிக்க விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் ஆணை

புது­­­­­­­­­­­­­­­டெல்லி: விஜய் மல்லை­­­யா­­­வின் பாஸ்­­­போர்ட்டை பறி­­­மு­­­தல் செய்­­­யு­­­மாறு வங்­­­கிகள் வைத்த கோரிக்கையைப் பரி­­­சீ­­­லித்த இந்திய உச்ச நீதி­­­மன்றம் இரண்டு வாரங்களுக்­­­குள் விஜய் மல்லையா பதில் அளிக்க வேண்டும் என்று நேற்று உத்­­­த­­­ர­­­விட்­­­டுள்­­­ளது. நீதி­மன்ற உத்­த­ரவு லண்ட­னில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கம் மற்றும் அவரது வழக்­க­றி­ஞர்­கள் மூலம் விஜய் மல்லை­யா­வுக்கு அனுப்பி வைக்­கப்­படும் எனத் தெரி­கிறது. எஸ்பிஐ வங்­கி­யின் தலைமை­யில் பிற வங்­கிகள் விஜய் மல்லையா நீதி­மன்றத்­தில் நேரில் முன்­னிலை­யா­கு­மாறு வலி­யு­றுத்தக் கோரிய நிலையில் விஜய் மல்லை­யா­வின் பதி­லுக்­குக் காத்­தி­ருக்­கு­ மாறு நீதி­மன்றம் தெரி­வித்­தது.

ஏற்­கெ­னவே விஜய் மல்லையா நீதி­மன்ற வழக்­கு­களை எதிர் நோக்­கி­யுள்ள நிலையில் வங்­கிகள் ஏன் அவ­ருக்­குக் கடன் அளித்­தன என்று நீதி­மன்றம் கேள்வி எழுப்­பி­யது. அப்போது, சிபிஐ அளித்த தக­வ­லின் அடிப்­படை­யில் விஜய் மல்லையா ஏற்­கெ­னவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இந்தியத் தலைமைச் சட்ட அதிகாரி தெரி­வித்­தார்.

வெளி­நா­டு­களில் விஜய் மல்லை­யா­வுக்கு இருக்­கும் சொத்து மதிப்பு அவர் கட்­டா­மல் வைத்­தி­ருக்­கும் கடன் தொகைக்­காட்­டி­லும் பல மடங்கு அதிகம் என்றும் அவர் தெரி­வித்­தார். இது குறித்து அவரது செய்தித் தொடர்­­­­­­­­­­­­­­­பா­­­­­­­­­­­­­­­ளர் கூறுகை­­­­­­­­­­­­­­­யில், "விஜய் மல்லையா எங்­­­­­­­­­­­­­­­கி­­­­­­­­­­­­­­­ருக்­­­­­­­­­­­­­­­கிறார் என்று எந்தத் தகவலும் இல்லை. மின்னஞ்சல் மூலமாக மட்டும் தான் அவர் தொடர்பு கொள்­­­­­­­­­­­­­­­கிறார்," என்று தெரி­­­­­­­­­­­­­­­வித்­­­­­­­­­­­­­­­தார். கிங்ஃ­­­­­­­­­­­­­­­பி­­­­­­­­­­­­­­­ஷர் ஏர்லைன்ஸ் தொடர்­­­­­­­­­­­­­­­பாக 17 வங்­­­­­­­­­­­­­­­கிகளின் கூட்­­­­­­­­­­­­­­­டமைப்பு ரூ.6,963 கோடி கடன் தொகையை மல்லையா குழு­­­­­­­­­­­­­­­மத்­­­­­­­­­­­­­­­தி­­­­­­­­­­­­­­­ட­­­­­­­­­­­­­­­மி­­­­­­­­­­­­­­­ருந்து வசூ­­­­­­­­­­­­­­­லிக்கப் போராடி வரு­­­­­­­­­­­­­­­கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!