சூச்சி - ராணுவத்துக்கிடையே பிளவு; வேறு நபர் அதிபராக நியமனம்

நைப்­பி­யிடா: அதிபர் பதவிக்­கான நிய­ம­னம் இன்று தொடங்­கு­வதன் தொடர்­பில் நாடா­ளு­மன்றம் நட­வ­டிக்கை­களை மேற்­கொண்­டுள்ள வேளையில் மியன்­மார் ராணு­வத்­திற்­கும் திரு­வாட்டி அங் சான் சூ சிக்கும் இடையே அண்மைக்­கா­ல­மாக இருந்­து­வந்த நல்­லு­ற­வில் பிளவு ஏற்­பட்­டுள்­ளது. இதன் மூலம் அவர் அதிபர் பதவி ஏற்­ப­தில் சிக்­கல்­கள் ஏற்­ப­ட­லாம் எனக் கூறப்­படு­கிறது. திரு­வாட்டி சூச்­சி­யின் தேசிய ஜன­நா­யக லீக் கட்சி ஆட்­சிப்­ பொ­றுப்பை ஏற்றுக்­கொள்­வதன் தொடர்­பில் ராணு­வத்­தி­னர் சுமு­க­மான முறையில் பொறுப்­பு­களை ஒப்­படைப்­பது போன்ற தோற்றம் ஏற்­பட்­டா­லும் அது பொய்த்­ தோற்­றமே என விவ­ர­ம­றிந்தோர் தெரி­விக்­கின்ற­னர்.

ராணு­வத்­தி­ன­ரு­டன் ஒருங்­கிணைந்து செயல்­படு­வது சாத்­தி­யம் என எண்­ணி­யி­ருந்தா­லும் தலைமைத் தள­ப­தி­யு­டன் அண்மை­யில் நடத்­தப்­பட்ட சந்­திப்­புக்­குப் பிறகு அது சாத்­தி­ய­மல்ல என திரு­வாட்டி சூச்சி கரு­து­வ­தாக அவரது கட்­சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் குறிப்­பிட்­டார். அடுத்த மாதம் முதல் தேதி ஆட்­சி­மாற்­றம் நடக்கை­யில் திரு­வாட்டி சூச்சி அதி­ப­ரா­கப் பதவி­யேற்­ப­தற்கு வழி­வ­குக்­கும் சட்ட மாற்­றங்கள் செய்வது உட்பட பல­த­ரப்­பட்ட பிரச்­சினை­களை ராணுவ அதி­கா­ரி­கள் கண்­டு­கொள்­ளா­தது அவரது வருத்­தத் ­துக்­குக் காரணம் எனக்­ கூ­றப்­படு­கிறது. இது தொடர்­பான பேச்­சு­வார்த்தை­கள் பற்றிக் கருத்­துரைக்க ராணு­வத்­ தரப்­புப் பேச்­சா­ளர் மறுத்­து­விட்­டார்.

ஆட்சி மாற்றம் ஏற்­படும் வரை ராணுவம் அர­சி­ய­லில் முக்­கி­யப் பங்கு வகிப்­பது அவ­சி­யம் எனக் கரு­து­வ­தா­க­வும் உட­ன­டி­யாக சட்­டத்­தில் மாற்­றங்கள் செய்தால் அது அபா­ய­க­ர­மான விளை­வு­களை ஏற்­படுத்­தும் எனவும் ராணுவத் தரப்­பில் வலி­யு­றுத்­தப் ­படு­கிறது. இரு வாரங்களுக்கு முன்பு ராணுவத் தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பல பொதுத் திட்­ டங்களின் நிர்­வா­கத்தைச் சரி­யா­கக் கையா­ள­வில்லை என திரு­வாட்டி சூச்­சி­யின் கட்­சியைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் குறிப்­பிட்­டதை அடுத்து இந்தப் பனிப்­போர் முற்­றி­யுள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது. சட்­டத்­தில் திருத்­தம் கொண்­டு­வ­ரப்­ப­டாது என்பதை அறிந்­து­ கொண்ட திரு­வாட்டி சூச்சி தமக்குப் பதிலாக கட்­சிக்கு விசு­வா­ச­முள்ள நபரை அதிபர் பதவிக்கு நிய­மிப்­பார் எனக் கூறப்­படு­கிறது.

ராணுவத் தலைமை ஆணையர் மின் ஆங் ஹிலாய்ங் உடன் கை குலுக்கும் அங் சான் சூச்சி அம்மையார். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!