இந்தியாவில் முதன்முறையாக பெண் போர் விமானிகள்

இந்தியாவில் போர் விமானங்களை இயக்கும் பணியில் முதன்முறை யாகப் பெண்கள் அமர்த்தப்பட உள்ளனர். மோகனா சிங், பாவனா காந்த், அவானி சதுர்வேதி ஆகிய மூன்று இளம்பெண்கள் போர் விமானிப் பணிக்குத் தகுதியானவர்கள் என்று இந்திய ஆகாயப் படையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இந்தப் படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் பெண்கள் இயக்குவது கடந்த 1991ஆம் ஆண்டு முதல் நடப்பில் உள்ளது. ஆனால், போர் விமானங்களை இயக்கும் பணியில் இப்போதுதான் அவர்கள் முதன்முதலாக அமர்த் தப்படுகின்றனர்.

இந்தக் கடினமான பணிக்குப் பெண்களை நியமிப்பதில் ஆரம் பத்தில் சில சிரமங்கள் இருந்த போதிலும் அத்தனைச் சோதனை களையும் தாண்டி வெற்றிகரமாக அவர்களுக்குப் போர் விமானங் களில் பயிற்சி தரப்பட்டு வருவ தாக இந்திய ஆகாயப் படை குறிப்பிட்டது. அனைத்துலக பெண்கள் தின மான நேற்று முன்தினம் மூன்று பெண் போர் விமானிகளும் அறி முகம் செய்து வைக்கப்பட்டனர். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பணியில் சாதனை புரிவதே தங்களது இலக்கு என்று இம் மூவரும் தெரிவித்துள்ளனர். வரும் ஜூன் 18ஆம் தேதி தங்களது பயிற்சியை முடிக்கும் இப்பெண்கள் போர் விமானிப் பணியைத் தொடங்குவார்கள்.

போர் விமானிப் பணியில் சாதிக்கப்போவதாக சூளுரைத்து இருக்கும் (இடமிருந்து) அவானி சதுர்வேதி, மோகனா சிங், பாவனா காந்த். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!