பாகிஸ்தான்-இந்தியா நட்பு மலரட்டும்

உலகின் தெற்கு ஆசியாவில் அமைந்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளாக இருந்து 1947ல் சுதந்திரம் பெற்றவை. ஒரே கூண்டில் அடைபட்டு ஒன்றாக இருந்து சுதந்திரப் பறவைகளாக ஆனபோது அதன் மக்களிடத்தில் சந்தேகம் கிளம்பியது. பிளவுபடாத இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம்கள் புதிய, சுதந்திரமான, இந்து சமயத்தினர் கையில் சென்றுவிட்ட இந்தியாவில் தங்கள் குரல் எடுபடாமல் போய்விடுமோ என்று பயந்தனர். அவர்கள் பிரிந்துபோகத் தலைப்பட்டனர். இந்துக்கள் தடுத்தனர். பலன் இல்லை. இந்தியா வசம் இருந்த நாட்டில் முஸ்லிம்கள் அதிகமாக செரிந்து வாழ்ந்த இரண்டு மாநிலங்கள் தனியாகப் பிரிக் கப்பட்டு பாகிஸ்தான் என்ற நாடு உதயமாயிற்று. தான் இந்தியாவுடன் இணையப் போவதாக ஜம்மு காஷ்மீரை ஆண்ட மன்னர் அறிவித்தார். இதனை பாகிஸ்தான் ஏற்கவில்லை. கலவரம் மூண்டது. இந்துக்கள், சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்குப் பாகிஸ் தான் காரணம் என்றது இந்தியா. முஸ்லிம்கள் அதிகம் பேரை இந்தியா கொன்றுவிட்டது என்றது பாகிஸ்தான். இரண்டு நாடுகளுக்கும் இடையில் பகைமை மூண்டது. சுதந்திரம் அடைந்த பிறகு சமயச் சார்பற்ற குடியரசான இந்தியாவையும் இஸ்லாமிய குடியரசு நாடாகிய பாகிஸ்தானையும் தொடக்கம் முதலே சந்தேகம், விரோதம் இரண்டும் பிடித்துக்கொண்டன. மொழி, கலாசாரம், புவியியல், பொருளியல் உறவுகள் எல்லாம் ஒன்றாக இருந்தாலும் இரண்டும் போருக்கு அடி மைப்பட்ட நாடுகளாக ஆகிவிட்டன. சுதந்திரம் பெற்றது முதல் இரண்டும் நான்கு போர்களைப் பார்த்துவிட்டன. இதில் மூன்றுக்கு காஷ்மீர் பிரச்சினைதான் காரணம். 1971ல் நடந்த இந்தியா-=பாகிஸ்தான் போர், அதாவது பங்ளாதேஷ் விடுதலைப் போர் மற்றொன்று. இவற்றோடு பிரகடனப் படுத்தப்படாத மோதல்களும் உண்டு. இந்த மோதல்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க, உறவை மேம்படுத்த அவ்வப்போது பற்பல முயற்சிகளும் இடம்பெற்று வந்ததுண்டு. 1980களில் சியாசியன் பிரச்சினை, 1981ல் காஷ்மீர் கலவரம், 1998ல் இரு நாடுகளும் அணுவெடிச் சோதனை, 1999ல் கார்கில் போர் எல்லாம் நடந்து, பதற்றத்தைக் குறைக்க 2003ல் சண்டை நிறுத்த உடன்பாடு, டெல்லி-=லாகூர் பேருந்துப் போக்குவரத்து எல்லாம் இடம்பெற்றபோதிலும் பயங்கரவாத தாக்குதல்கள், குறிப்பாக 2001ல் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2008ல் மும்பை தாக்குதல் இடம்பெற்றதால் அமைதி முயற்சிகள் அடியோடு நாசமாகி மீண்டும் பிரச்சினைகள் வெடித்தன. இப்படித்தான் பக்கத்து நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்றன. இப்போது இரண்டும் அணுசக்தி தயாரிக்கும் ஆற்றல் உள்ள நாடுகள். அதோடு, பாகிஸ்தான் சிறிய அளவிலான அணுசக்தி ஆயுதங்களைத் தயாரிக்கும் அளவுக்குப் போய்விட்டதாக அண்மையில் அபாயச் சங்கு ஊதப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் 2013ஆம் ஆண்டிலும் 2014ஆம் ஆண்டிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தியப் பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் ஷெரிஃபும் பாரிசில் நடந்த பருவநிலைக் கூட்டத் தில் கலந்தகொண்டபோது நவம்பர் 30ல் சந்தித்தனர். ஒரு வாரம் கழித்து இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேங்காக்கில் சந்தித்தனர். பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் சென் றார். அதன்படி இரு நாடுகளின் வெளியுறவுச் செலயர்கள் வரும் ஜனவரியில் பேசலாம் என்று பாகிஸ்தான் யோசனை முன்வைத்துள்ளது. இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடியும் பாகிஸ்தா னுக்கு திடீர் வருகையை மேற்கொண்டு பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பை சந்தித்து நேசக்கரம் நீட்டியுள்ளார். உத்தேச இந்தியா=பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு விரைவில் ஏற்பாடு செய்யலாம் என்று பாகிஸ்தானின் கிரிக்கெட் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியா வும் பாகிஸ்தானும் உண்மையிலேயே அமைதிக்கு உறுதி பூண்டு விட்டதாகத் தெரிகிறது என்று அமெரிக்கா குறிப் பிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் இதுவரை இல்லாதபடி அமைதி அறிகுறிகள் தெரிகின்றன. இந்தக் காய்கள் கனியட்டும். அமைதிப் பழத்தை தெற்கு ஆசிய மக்கள் சுவைக்கட்டும். உலகுக்கும் தரட்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!