காலிறுதிக்குள் நுழைந்த ஆர்சனல் கிங்ஸ்டன் அபோன் ஹல்

ஒலிவியேர் ஜிரூ, தியோ வால்காட் தலா இரண்டு கோல்கள் போட ஆர்சனல் குழு ஹல் சிட்டியை 4=0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் விளைவாக இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஆர்சனல் தகுதி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் எஃப்ஏ கிண்ணப் போட்டியில் அதன் வெற்றிப் பயணத்தை அது தொடர் கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் அக்குழு எஃப்ஏ கிண்ணப் போட்டிகளில் ஓர் ஆட்டத்தில்கூட தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகக் கடைசி-யாக எஃப்ஏ கிண்ண ஆட்டத்தில் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிளாக்பர்ன் ரோவர்ஸ் குழுவிடம் ஆர்சனல் தோல்வி அடைந்தது.

இடைவேளைக்கு நான்கு நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த வேளையில் ஆர்சனலின் முதல் கோலை ஜிரூ போட்டார். இந்த கோலுக்கு முன்பு 652 நிமிடங்களுக்கு ஹல் சிட்டி அதன் சொந்த அரங்கில் ஒரு கோல்கூட விடாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்சனலின் கியேரன் கிப்ஸ் அனுப்பிய பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளியானது. இதற்கிடையே, காயம் காரணமாக ஆர்சனலின் மார்ட்டர் சாக்கருக்கும் கேபிரியலுக்கும் ஆட்டத்தில் தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும், பிற்பாதி ஆட்டத்தில் ஆர்சனல் அதன் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஜிரூ மீண்டும் கோல் போட்டார்.

ஆர்சனலின் மூன்றாவது கோலைப் போட்ட தியோ வால்காட். பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்க ஹல் சிட்டியின் கோல்காப்பளர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!