மார்ச் 20ல் ‘தெறி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா

விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தைப் பற்றி நாளும் ஒரு புதுத் தகவல் வெளியான வண்ணம் உள்ளது. அட்லி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளது தெரிந்த விஷயம். மொத்தம் 7 பாடல்கள் கொடுத் துள்ளாராம். அதில், விஜய், டி.ராஜேந்தர், தேவா ஆகியோர் தலா ஒரு பாடல் பாடியுள்ளனர். இப்போது 'தெறி ரேப்' என்ற தீம் மியூசிக் ஒன்றை ஜி.வி.பிரகாஷ் இசையமைத் துள்ளாராம். இது கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என ஜி.வி. பிரகாஷ் நம்பிக்கை தெரிவிக்கிறார். மேலும், இப்படத்தின் முதல் பாதிக்கான பின்னணி இசைப் பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துவிட்டது. வருகிற மார்ச் 20ஆம் தேதி பாடல் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட் டுள்ளனர். ஆனால், இந்த விழாவை எங்கு நடத்துவது என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.

'தெறி' படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குநர் மகேந்திரன், மீனா மகள் நைனிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் தோன்றுகிறார்கள். இப்படத்தைக் கலைப்புலி எஸ்.தாணு மிகப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று படம் வெளியாகும் எனப் படக்குழு வினர் தெரிவிக்கின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!