புரியாத வரிகள், புரியாத பாடல்கள்: சீறும் சினேகன்

வி.த‌ஷி இசையில் எஸ்.டி.குணசேகர் இயக்கியுள்ள படம் 'களவு செய்யப் போறோம்'. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் பாடலாசிரியர் சினேகனின் பேச்சில் தான் அதிக காரம். பொதுவாகவே ஒரு நிகழ்ச்சிக்கு வந்தால் வந்த வேலையை விட்டுவிட்டு மற்ற விஷ யங்களில் மூக்கை நுழைத்து கருத்துச் சொல்வது சினிமா மேடைகளில் சகஜமாகிவிட்டது. இந்த மேடையை பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வக்காலத்து வாங்கும் மேடையாக்கிக் கொண் டார் சினேகன்.

"நான் சில நிகழ்ச்சிகளில் பேசும் போது அவருக்கு ஆதரவாக சில வற்றைச் சொல்லி இருக்கிறேன். அத னால் உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்கள் என்னிடம் கோபித்துக் கொண்டனர். "பவர் ஸ்டார் மீது பல வழக்குகள் உள்ளன. அப்படியிருக்க நீங்கள் ஏன் அவருக்கு ஆதரவாகப் பேசுகிறீர்கள்? என்றெல்லாம் கேள்வி கேட்டு சண்டை யிட்டனர். நான் எனது ரசிகர்களிடம் சொன்னதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

"ஒரு மனிதர் பலவிதமான அவமா னங்களைக் கடந்து வருவது சிரமம். அப்படி அவரை இந்தச் சமூகம் கேவல மாகப் பேசி இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் சகஜமாக எடுத்துக் கிட்டு முன்னுக்கு வந்திருக்கிறார் அவர். அதனால் நான் அவருக்கு எப்போதும் ஆதரவு அளித்து வருகி றேன்," என்றார் சினேகன். அதன் பிறகு பேச்சின் திசையை மாற்றி, தன் தொழிலுக்கு வந்தார். அதாவது பாட்டெழுதுகிற விஷயத் திற்குத் தாவினார்.

"இப்போது சிலர் பாடல் எழுது கிறார்கள். புரியாத வரிகளில், புரியாத அர்த்தங்களில் எழுதுகிறார்கள். யாருக்குமே அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் புரியவில்லை. "அப்படியானால் என்ன வெங்கா யத்துக்கு அப்படிப்பட்ட பாடல்களை எழுத வேண்டும்? எதற்காக புரியாத பாடல்களை ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும்?" என்று காட்டத்துடன் கேள்வி எழுப்பினார் சினேகன். அவர் யாரை மனதில் வைத்து இப்படிப் பேசுகிறார் என்பது கோடம் பாக்கத்தில் இப்போது புது விவாத மாகியுள்ளது. சரி... அது யாராக இருக்கும்?

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!