சொத்துக்குவிப்பு வழக்கு: இன்று மீண்டும் விசாரணை

புதுடெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக் கின் மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு தொடர்பில் இரு தரப்பு வாதங்களும் வேறு எந்த தடைகளும் இன்றி நடைபெற்றால், மொத்தம் 12 நாட்களில் தீர்ப்பு வெளியாகும் என புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக அரசியல் களத்திலும் அதிமுக வட்டாரங் களிலும் பரபரப்பு நிலவுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் 100 கோடி ரூபாய் அபராதத்துடன் கூடிய 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் முதல்வர் ஜெயலலிதா. அம்மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட் டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது கர்நாடகா அரசு. இந்த வழக்கில் கடந்த மாதம் 23ஆம் தேதி விசாரணை தொடங் கியது. அப்போது, கர்நாடகா அரசுத்தரப்பு இறுதி வாதத்தை வைத்தது. "கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி, ஜெய லலிதாவின் சொத்துகளை மதிப் பிட்டதில் வெளிப்படையாகவே கணிதப் பிழைகளுக்கு இடமளித்துள்ளார்.

எனவே அவரது தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்," என கர்நாடகா அரசுத்தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதி பதிகள் உத்தரவிட்டனர். இன்று மீண்டும் தொடங்கும் விசாரணையின் போது, கர்நா டகா அரசுத் தரப்பு இறுதி வாதத்தை முன்வைக்க மேலும் 5 நாட்கள் அவகாசம் கோர இருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு எந்த ஒரு காரணத்துக் காகவும் விசாரணை ஒத்திவைக் கப்படாமல் இருந்தால் இந்த வழக்கில் 12 நாட்களில் தீர்ப்பு வந்துவிடும் என கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!