குறுந்தொலைவு ஏவுகணைகளை சோதித்தது

வடகொரியா சோல்: வடகொரியா இரண்டு குறுந்தொலைவு ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதனை செய்துள்ளது என்றும் கிழக்குக் கடலோரப் பகுதியிலிருந்து அந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்ட தாகவும் தென் கொரிய ராணுவம் கூறியது. அந்த சோதனையை மேற் கொண்ட சில மணி நேரங்களில் தென்கொரிய நிறுவனங்களின் எல்லா சொத்துகளும் முழுமை யாக தங்கள் வசம் கொண்டு வரப்படும் என்றும் வடகொரியா அறிவித்துள்ளது.

இரு கொரியாக்களும் சேர்ந்து அமைத்துள்ள தொழில் பேட்டை யில் உள்ள தென்கொரிய நிறுவனங்களின் சொத்துகள் மற்றும் கும்காங் சுற்றுலாத் தளத்தில் உள்ள சொத்துகள் அவற்றுள் அடங்கும். இந்த நேரத்திலிருந்து தென் கொரியாவுடனான உடன்பாடு களையும் பரிமாற்றத் திட்டங் களையும் வடகொரியா ரத்து செய்வதாக கொரிய ஒருங் கிணைப்புக்காக அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்தது. நவீன ஏவுகணைகளில் பொருத்தக்கூடிய வகையில் வடகொரிய விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் குண்டுகளை மிகச் சிறிய அளவில் தயாரித் திருப்பதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் -உன் கூறியுள்ளார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அந்நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களையும் விஞ்ஞானிகளையும் சந்தித்துப் பேசினார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!