சூச்சியின் கட்சி அதிபர் வேட்பாளரை முன்மொழிந்தது

யங்கூன்: மியன்மாரில் திருவாட்டி ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அக் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அரசியல் அனுபவம் உள்ள வருமான டின் கியவை அதிபர் வேட்பாளராக முன்மொழிந் துள்ளது. பல்கலைக்கழக ஆசிரியரான 69 வயது டின் கியவ், திருவாட்டி சூச்சியின் நெருங்கிய நண் பராவார். ஆங் சான் சூச்சிக்கு வாகன ஓட்டுநராகவும் அவர் இருந்திருக்கிறார். தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைமையிலான நாடாளுமன்ற கீழவை நேற்று டின் கியவை அதிபர் வேட்பாளராக முன் மொழிந்தது.

மியன்மாரில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் திருவாட்டி சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்ற போதிலும் அவர் அதிபராக வருவதை அந்நாட்டு அரசியலமைப்பு சட்டம் தடை செய்கிறது. இருப்பினும் அதிபருக்கும் மேலான பதவியை வகித்து நாட்டை வழிநடத்தவிருப்பதாக திருவாட்டி சூச்சி ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரது கட்சி அவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவரை அதிபர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளது. திரு டின் கியவ் ரங்கூன் பல்கலைக்கழகத்திலும் ஆக்ஸ் ஃபர்டு பல்கலைக்கழகத்திலும் பொருளியல் துறையில் பட்டம் பெற்றவர். அத்துடன் இவர் பிரபல எழுத்தாளர் மின் து வுனின் மகனும் ஆவார். திரு மின் து வுன் ஆரம்பத்தில் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக இருந்தவர். இவர் சூச்சியின் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர். டின் கியவின் மனைவி சு லிவினும் திருவாட்டி சூச்சிக்கு மிகவும் நெருக்கமான வர்.

ஜனநாயகப் போராட்டத் தலைவி ஆங் சான் சூச்சி 2010ஆம் ஆண்டு வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டபோது திரு டின் கியவ் அவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார். திருவாட்டி சூச்சியின் முன்னாள் வாகன ஓட்டுநரும் நெருங்கிய உதவியாளருமான டின் கியவை அதிபர் வேட்பாளராக அவரது கட்சி முன்மொழிந்துள்ளது. படம்: ஏஎஃப்பி (கோப்புப் படம்)

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!