சாலை விபத்தில் 12 பேர் காயம்

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் நேற்றுக் காலை நிகழ்ந்த மோச மான விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் தனியார் பேருந்து, வேன், செடான் கார் ஆகிய மூன்று வாகனங்கள் சிக்கின. காலை 7.30 மணியளவில் மரினா கோஸ்ட்டல் விரைவுச் சாலை திசையில் கிளமெண்டி அவன்யூ 6க்கு முன்பு விபத்து நிகழ்ந்தது. மலேசியாவில் பதிவான வேனிலிருந்த ஓட்டுநர் உட்பட பத்து பேருடன் செடான் காரின் ஒட்டுநரும் அதில் பயணம் செய்த பயணியும் காயம் அடைந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்துக்கு ஒரு தீயணைப்பு வாகனம், ஒரு ரெட் ரைனோ, ஒரு துணை வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப் பட்டன என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தகவல்கள் கூறுகின்றன.

வேனில் பயணம் செய்த 17 முதல் 20 வயது வரைப்பட்ட ஏழு பயணிகள் சிறு காயங் களுக்காக இங் டெங் ஃபோங் மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் வேனில் சிக்கிக் கொண்ட ஒருவரை மீட்பதற்காக குடிமைத் தற்காப்புப் படையினர் கனத்த ஆயுதங்களைப் பயன் படுத்த வேண்டியிருந்தது.

விரைவுச் சாலையின் குறுக்கே விபத்தில் சிக்கிய வேனும் காரும். படம்: ஸ்டோம்ப்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!