எட்டுமாடி அறைகலன் மையம் ஒன்று சுங்கை காடுட்டில் கட்டப் படவுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஹெக்டர் நிலப்பரப்பில் அமைய வுள்ள இந்த மையம் 2018 இறுதிக் குள் தயாராகிவிடும் என எதிர் பார்க்கப்படுவதாக வர்த்தக தொழில் (வர்த்தகம்) அமைச்சர் லிம் ஹங் கியாங் தெரிவித்தார். 'தி ஜேடிசி ஃபர்னிச்சர் ஹப்@ சுங்கை காடுட்' என்ற அந்த மையத்தில் புதிய தொழில் உத்தி களுக்கு ஏற்ற கடைகள் இருக்கும். அறைகலன்களையும் அதற்கு தொடர்பான பொருட்களையும் ஒரே கூரையின்கீழ் கொண்டு வருவது மையத்தின் நோக்கம். சிங்கப்பூர் அனைத்துலக அறைகலன் கண்காட்சியை நேற்றுத் தொடங்கி வைத்து அமைச்சர் லிம் ஹங் கியாங் பேசினார்.
"அறைகலன் துறை தொடர்ந்து போட்டித்தன்மை மிக்கதாக விளங் கவும் எதிர்கால வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் சிங்கப்பூர் நிறுவனங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முதலீடு செய் வது அவசியம்," என்றார் அவர். இத்துறையில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தக்கூடிய இரு முக்கிய போக்குகளாக தொழில் நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி யையும் ஆசியாவில் நடுத்தர வர்க்க மக்கள் பெருக்கத்தையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் புதிய எட்டு மாடி மையம், உயர்தர தொழில்நுட்பத்துடன் 63 மாதிரி தயாரிப்பு தொழிற்சாலைகளைக் கொண் டிருக்கும் என்று ஜேடிசி தெரிவித் தது. சிங்கப்பூரின் அறைகலன் தொழில்துறையை மாற்றி அமைப் பதில் இந்த மையம் முக்கிய பங் காற்றும் என்று ஜேடிசியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பெங் சியோங் பூன் கூறினார். இந்த மையத்தில் அறைகலன் களையும் அவற்றின் மூலம் வீட்டை அலங்கரிக்கும் அனுபவத்தையும் தரும் நிலையம் ஒன்றும் அமைகிறது. இதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் ஜேடிசியும் சிங்கப்பூர் அறைகலன் தொழிற்துறை மன்ற மும் கையெழுத்திட்டுள்ளன.
அறைகலன் கட்டடத்தின் மாதிரி வடிவத்தை அமைச்சர் லிம் ஹங் கியாங் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்