பூட்டிய வீட்டில் தீ; உயிருக்குப் போராடிய மாது

பூட்டப்பட்டிருந்ததால் தீப்பற்றி எரிந்த வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் 46 வயது மாது உயிருக்குப் போராடியிருக்கிறார். சன்னல் வழியாக மூச்சுக் காற்றுக்கு ஏங்கிய அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது போராட்டத்தை சன்னல் வழியாகப் பார்த்த அண்டை வீட்டுக்காரர்களான பதினெட்டு வயது மாணவியும் தாயும் அவர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். அதில் மாதுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டது. வீடு முழுவதும் கரும்புகை பரவியதால் மூச்சுத் திணறலுக்கு ஆளான அவர்,

சன்னல் வழியாக தலையைக் காட்டி சுவாசித்துக் கொண்டிருந்தார். வீட்டின் இரும்புக் கதவு சைக்கிள் சங்கிலியால் பிணைக் கப்பட்டு பூட்டப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 31, புளோக் 318ல் ஏழாவது மாடியில் உள்ள அந்த வீட்டில் தீ மூண்டது அதிகாலை 3.50 மணியள வில் தகவல் கிடைத்து அங்கு வந்த குடிமைத் தற்காப்புப் படை யினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

வரவேற்பு அறையில் மூண்டிருந்த தீயை அணைத்த தீ அணைப்பு வீரர்கள் அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிங்கப்பூர் பொது மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்று குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் கடன் முதலைகளுடன் தொடர்புடைய வரின் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ‌ஷின்மின் நாளேட்டை மேற்கோள் காட்டி நியூபேப்பர் குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!