சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1 இடையே கட்டணப் போட்டி

நான்காண்டுகளில் முதன் முறை யாக தொலைத்தொடர்பு நிறு வனங்களுக்கிடையே கைபேசிப் பயன்பாட்டுக்கான கட்டணப் போட்டி உருவாகியுள்ளது. 'சிங்டெல்' நிறுவனத்தைத் தொடர்ந்து 'எம்1' நிறுவனமும் தனது புதிய, மறுஒப்பந்த வாடிக் கையாளர்களுக்கான கூடுதல் தரவுக் கட்டணத்தை மாதத்துக்கு $5.90 ஆக நிர்ணயித்துள்ளது. 'சிங்டெல்' இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது. 'எம்1' வாடிக்கையாளர்களின் அடிப்படை கைபேசிப் பயன் பாட்டுத் திட்டத்தில் 3ஜிபி தரவுப் பயன்பாடு $42 கட்டணத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கூடுதலாக 2ஜிபி சேர்த்து $47.90 விலையில் 5ஜிபி தரவுப்பயன்பாடு வழங்கப்படவுள்ளது. முன்பு 5ஜிபி தரவுப் பயன் பாட்டுக்கு 'எம்1' வாடிக்கை யாளர்கள் $82 செலுத்த வேண்டி யிருந்தது. அதேபோல 12ஜிபி தரவுப் பயன்பாட்டுத் திட்டத்திற்கு 'சிங்டெல்' வாடிக்கையாளர்கள் முன்பு $239.90 செலுத்த வேண் டியிருந்தது. ஆனால் அந்த அளவு தரவுப் பயன்பாட்டுக்குத் தற்போது $108.80 செலுத்தினால் போதும். 'சிங்டெல்', 'எம்1' நிறுவனங்கள் பல புதிய திட்டங்களை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் இந்தப் போட்டியில் நுழைந்த ஸ்டார் ஹப்பும் நேற்றுக் கட்டணக் குறைப்புகளை அறிவித்ததாக நேற்று வெளியான தகவல்கள் தெரிவித்தன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!