முதல்வராகும் யோகம் குறித்து சோதிடம் பார்க்கும் விஜயகாந்த்

சென்னை: முதல்வராகும் அதிர்ஷ்டம் தனக்கு இருக்கிறதா என்பதை அறிந்த பிறகே கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க விஜயகாந்த் காத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தேமுதிக வட் டாரங்கள் கூறியதாவது: "அண்மைகாலமாக விஜயகாந்த் கட்டை விரல் சோதிடத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். "இந்த சோதிடர் தரும் ஆலோ சனைப்படிதான் கட்சி நிகழ்ச்சி களுக்கு தேதி குறிக்கப்படுகிறது. அந்த சோதிடர் அறிவுரைப்படி தான் ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சி புரம் கோவில்கள், திருமங்கலம் அருகே உள்ள குலதெய்வம் வீர சின்னம்மாள் கோவிலுக்கு விஜய காந்த், மனைவி பிரேமலதா ஆகி யோர் அடிக்கடி சென்று வழிபாடு செய்கின்றனர்.

"விஜயகாந்திடம் கட்டை விரல் சோதிடர், 'உங்களுக்கு முதல் வராகும் அதிர்ஷ்டம் உள்ளது. அதற்கான காலம் கனிந்து வரு கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி போல தமிழகத்தில் நீங்கள் ஆட்சியைப் பிடிக்கும் காலம் நெருங்கி வருகிறது. அதற்காக நீங்கள் காத்திருக்கவேண்டும்,' என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். அதைக் கேட்டுத்தான் கூட்டணி முடிவை அறிவிக்காமல் விஜயகாந்த் காலம் தாழ்த்தி வருகிறார். "முன்னாள் நண்பரும் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவாக இருந்தவருமான சுந்தர்ராஜனின் சகோதரி மகன் பாலா. இவர் மூலம்தான் கட்டை விரல் சோதி டத்தை விஜயகாந்த் கேட்டறிந்து வருகிறார். "பாலாவிற்கு சோதிடம் தெரி யாது. ஒருமுறை கொல்லிமலை சித்தர் ஒருவரிடம் விஜயகாந் திற்காக சுந்தர்ராஜன் சோதிடம் பார்த்துள்ளார். "சித்தர் கூறிய சோதிட விவ ரங்களை விஜயகாந்திடம் சொல் லத் தெரியாமல் சுந்தர்ராஜன் திணறினார். அப்போது உடன் இருந்த பாலா, சித்தர் சொன்னது போலவே விஜயகாந்திடம் ஒப்பு வித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!