டிராக்டர் கடனைச் செலுத்தாததால் விவசாயியை தாக்கிய போலிசார்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வாங்கிய டிராக்டர் கடன் தவணை யைச் செலுத்தத் தவறிய விவ சாயியைப் போலிசார் அடித்து, உதைத்து இழுத்துச் சென்றுள்ள னர். இச்சம்பவம் காவிரி டெல்டா விவசாயிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலன், 50. கடந்த 2011-ல் தஞ்சை யில் உள்ள தனியார் நிதி நிறு வனத்தில் ரூ. 3.80 லட்சம் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார்.

இந்தக் கடனுக்காக தலா ரூ.64,000 வீதம் ஆறு தவணை களைச் செலுத்தியுள்ளார். இந்நிலையில், கடைசி இரு தவணைகள் நிலுவை இருந்த தாகவும் நெல் அறுவடை முடிந்த பின்னர் தவணைத் தொகையைச் செலுத்துவதாகவும் தெரிவித்துள் ளார். ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள் 32,000 ரூபாயை முதலில் செலுத்தக் கூறி அத் தொகையைப் பெற்றுள்ளனர். கடந்த 4-ஆம் தேதி அறுவடை யில் பாலன் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் குமாரசாமி, நிதி நிறுவன ஊழியர்கள் டிராக் டரில் இருந்த பாலனைக் கீழே தள்ளி, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். பின்னர் அவ ரைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றதுடன் டிராக்டரை யும் பறிமுதல் செய்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!