இசையின் வழி எடுத்தியம்பும் ‘பாக்ஸ்சைல்ட்’

பிலிப்பீன்ஸ், ஸ்பானிய, இந்திய மரபுடைமைகளைச் சேர்ந்தவராக இருந்தாலும் தந்தையின் வழி வந்த தமது தமிழ் அடையாளத்தை வலுப்படுத்த ஆர்வத்துடன் இருக்கிறார் ஜீவன் குலரெத்தினம், 25. 'அறம்' என்ற கருப்பொருளைக் கொண்ட இவ்வாண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் சிங்கப்பூர், இந்திய எழுத்தாளர்களின் தமிழ் கவிதைகளுக்கு இசையமைத்து அவற்றைப் படைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தபோது உற்சாகத்துடன் அதனை ஏற்றார் ஜீவன். விழாவில் மகாகவி பாரதி யாரின் 'ஒளிபடைத்த கண்ணி னாய்', உள்ளூர் கவிஞர் க.து.மு. இக்பாலின் 'சுடர்' போன்ற பாடல் களுடன் இளம் எழுத்தாளர் ஹரினியின் கவிதைகளையும் ஜீவனும் 'பாக்ஸ்சைல்ட்' என்ற அவரது இசைக்குழுவும் படைக்க வுள்ளனர்.

ஜப்பானிய 'ராக்' இசையின் தாக்கத்தை தங்கள் இசையில் அறிமுகப்படுத்தும் 'பாக்ஸ்சைல்ட்' குழு, ஆங்கிலத்தில் இசை நிகழ்ச் சிகளைப் படைப்பது வழக்கம். புது முயற்சியாக, முதல்முறையாக தமிழில் அக்குழு இசை நிகழ்ச்சி யைப் படைக்கவுள்ளது. "மின்னியல் கித்தாரிலிருந்து இசையை எழுப்பி, கணீர் குரலில் பாடி, 'பாக்ஸ்சைல்ட்' குழுவின் தனித்துவமான பாணியை வெளிப் படுத்தும் வகையில் இசையை இயற்றி அரங்கேற்றவுள்ளோம்," என்றார் குழுவின் முன் னணி பாடகரான ஜீவன்.

'பாக்ஸ்சைல்ட்' குழுவின் இசையைக் கருவியாகக் கொண்டு தமிழ்மொழியின் அழகையும் கலா சாரத்தையும் இளையர்களுக்கு பிடித்தமான 'ராக்' இசையின் வழி அவர்களுக்கு எடுத்துரைக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். இசைக்குழுவில் ஜீவனுக்கு மட்டுமே தமிழ் தெரியும். பள்ளியில் தாய்மொழிப் பாடமாக தமிழ் பயின்ற அவர், வீட்டில் பேசுவது ஆங்கிலம். இதனால், தமிழ்க் கவிதைகளை புரிந்துகொள்வதும் அவற்றைச் சரியாக உச்சரிப்பதும் சவாலாகவே இருந்தது என்றார் அவர்.

மகாகவி பாரதியார், சிங்கப்பூர்க் கவிஞர் க.து.மு.இக்பால், இளம் எழுத்தாளர் ஹரினி ஆகியோரின் கவிதைகளை 'ராக்' இசை மூலம் படைக்கவிருக்கும் 'பாக்ஸ்சைல்ட்' குழு. படம்: பாக்ஸ்சைல்ட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!