பலசரக்கு கடைகள் மூலம் பண விநியோகம் செய்ய திட்டம்: ஆம் ஆத்மி புகார்

சென்னை: சட்டப்பேரவைத் தேர் தலையொட்டி தமிழக வாக்காளர் களுக்கு பலசரக்கு கடைகள் மூலம் பணம் விநியோகிக்கப் படுவதாக ஆம் ஆத்மி கட்சி புகார் எழுப்பி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனு ஒன்று அளிக்கப் பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் பயனடையும் வகையில் தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "இந்த தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரசாரங்கள், கூட்டங் கள் நடத்தும்போது மின்சாரம் திருடுவதைக் கண்காணித்து தடுக்கவேண்டும். தேர்தல் நடத்தை விதிகளைச் சுட்டிக் காட்டி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மக்களுக்கு வழங்க சில மருத்துவமனைகள் மறுக்கின் றன.

மக்களின் உயிர், பாது காப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசியல் கூடாது. எனவே இது தொடர்பாக தெளிவான உத்தரவைப் பிறப்பித்து மக்கள் பயன டைய வகை செய்யவேண்டும்," என ஆம் ஆத்மி வலியுறுத்தி உள்ளது.தேர்தல் முடிவு வெளியாகும் வரை மதுபானக் கடைகள் மூடப் படவேண்டும் என்று கோரியுள்ள அக்கட்சி, பல்வேறு அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி உள்ளது. "தங்களுக்குத் தெரிந்த பல சரக்குக்கடை, மருந்துக் கடை களில் பணத்தைப் பதுக்கி வைத் துள்ளனர். இந்த முறை இந்தக் கடைகள் வழியாக பணப் பட்டு வாடா நடக்க இருக்கிறது. கடந்த தேர்தலின்போது ரூ.55 கோடி பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது. அந்தப் பணம் எங்கு உள்ளது? சம்பந்தப்பட்ட வர்களிடம் திருப்பித் தரப்பட்டு விட்டதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்," என ஆம் ஆத்தி மேலும் கோரியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!