வெளியேறியது செல்சி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தின் நடப்பு வெற்றி யாளராக இருந்தபோதும் செல்சி குழுவிற்கு இந்தப் பருவம் வெற்றி கரமானதாக அமையவில்லை. ஜோசே மொரின்யோ நிர்வாகத் தின்கீழ் இந்தப் பருவத்தின் தொடக்கம் முதலே மோசமாக விளையாடியதால் பட்டியலின் இரண்டாம் பாதிக்குச் சென்றது அக்குழு. ஆகையால், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றி இங்கிலாந்தில் அடைந்த இழுக்கில் இருந்து மீள அந்தக் குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்தத் திட்டத்தைத் தவிடுபொடியாக்கி விட்டது பிரான்சின் பிஎஸ்ஜி காற்பந்துக் குழு. சாம்பியன்ஸ் லீக்கில் காலிறு திக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த பிஎஸ்ஜி குழு, நேற்று அதிகாலை நடந்த இரண்டாவது ஆட்டத்திலும் 2=1 என வாகை சூடியது. இதையடுத்து, ஒட்டுமொத்த கோல் கணக்கில் 4=2 என முன்னிலை பெற்று காலிறுதிக்கு முன்னேறியது பிஎஸ்ஜி.

செல்சியின் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடந்த அந்த ஆட்டத்தின் 16ஆம் நிமிடத்தில் கோலடித்து பிஎஸ்ஜிக்கு முன் னிலை பெற்றுத் தந்தார் அட்ரியன் ரபியாட். ஆயினும், அடுத்த 11வது நிமிடத்தில் பதில் கோல் புகுத்தி அந்த முன்னிலையை ஈடு செய்தார் செல்சியின் நட்சத்திர ஆட்டக்காரர் டியேகோ கோஸ்டா. இதையடுத்து, செல்சி ஆட்டத் தில் மீண்டெழுந்து மேலும் சில கோல்களைப் போடும் என அரங்கில் குழுமியிருந்த ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் தாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, தமது குழுவின் வலைக் குள்ளேயே இன்னொரு முறை பந்து புகுந்ததால் அவர்கள் ஏமாந்து போயினர். ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் பிஎஸ்ஜியின் வெற்றி கோலை அடித்தார் ஸ்லாட்டன் இப்ராகி மோவிச். இந்த கோலால் சாம்பி யன்ஸ் லீக்கில் 50 கோல்களை அடித்தோர் வரிசையில் 14வது ஆளாக தமது பெயரையும் அவர் இணைத்துக்கொண்டார். இந்த வெற்றியின்மூலம் தொடர்ந்து இரண்டாவது பருவ மாக செல்சியின் சாம்பியன்ஸ் லீக் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டது பிஎஸ்ஜி.

பந்தை விட்டுவிட்டு செல்சி ஆட்டக்காரர் செஸ்க் ஃபேப்ரிகாசின் (இடது) மார்பில் உதைத்ததால் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டார் பிஎஸ்ஜி குழுவின் தியாகோ. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!