உலகிலேயே வாழ்க்கைச் செலவினம் அதிகமுள்ள நாடாக, 116 புள்ளிகளுடன் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிங்கப்பூர் விளங்கி வருகிறது. இதை 'இஐயூ' எனப்படும் பொருளியல் புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கிறது. இரண்டாம் நிலையில் 114 புள்ளிகளுடன் ஸ`ரிக், ஹாங்காங் ஆகிய நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆண்டுக்கு இரு முறை கருத்தாய்வு செய்து 160 பொருட்கள், சேவைகளின் 400 தனிப்பட்ட விலை களை ஒப்புநோக்கி 'இஐயூ' நிறுவனம் உலக ளாவிய வாழ்க்கைச் செலவின அறிக்கையைத் தயாரிக்கிறது.
உணவு, பானம், உடைகள், குடும்பத்துக்குத் தேவையான பொருட்கள், வாடகை, போக்குவரத்து, பயனீட்டுக் கட்டணம், தனியார் பள்ளிகள், பணிப்பெண் உதவி, பொழுதுபோக்குச் செலவினங்கள் ஆகியன ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. சிங்கப்பூரில் கார்களை வாங்கிப் பராமரிப்பது, போக்குவரத்து, பயனீட்டுக் கட்டணம் ஆகியன கூடுதலாக இருந்தாலும் அடிப்படை மளிகைப் பொருட்களின் விலை ஒப்பிடக்கூடிய தாகவே உள்ளது.