கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளுக்கு ஏப்ரலில் பதிவு

கல்வி அமைச்­சின் பாலர் பள்­ளி­களில் 2017ஆம் ஆண்­டுக்­கான மாணவர் பதிவு ஏப்ரல் மாதத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது. 2012 ஜனவரி 2ஆம் தேதி முதல் 2013 ஜனவரி முதல் தேதி வரையில் பிறந்த சிங்கப்­பூர் குடி­யு­ரிமை அல்லது நிரந்த­ர­வா­சத் தகு­தி­யுள்ள மாண­வர்­களுக்­கான பதிவு இது. ஏப்ரல் 2 சனிக்­கிழமை, ஏப்ரல் 4 திங்கட்­கிழமை ஆகிய இரு நாட்­களும் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையில் எட்டு நிலை­யங்களில் பதிவு நடை­ பெ­றும் என்று கல்வி அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது. நார்த்­ஓக்ஸ், ரிவர்சைட், யீசூன், பொங்கோல் கிரீன், பொங்கோல் வியூ, ஃபேரர் பார்க், தெம்ப­னிஸ், டாச்சோங் ஆகியவை அந்த எட்டு நிலை­யங்க­ளா­கும்.

ஃபெர்­ன்வேல் லிங், செங்காங் கிரீன், ஸ்பி­ரிங்­டேல், பிளாங்கா ரைஸ், ஃப்­ரண்­டி­யர், வெஸ்ட் ஸ்பிரிங், வெஸ்ட்­வுட் ஆகிய ஏனைய ஏழு நிலை­யங்களி­லும் ஏப்ரல் 9 சனிக்­கிழமை, ஏப்ரல் 11 திங்கட்­கிழமை ஆகிய இரு நாட்­களும் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையில் பதிவு நடை­பெ­றும். அனைத்து நிலை­யங்களும் பதிவு நடை­பெ­றும் சனிக்­கிழமை­களில் காலை 9 முதல் பகல் 2 மணி வரை பொது­மக்­களுக்­குத் திறந்து விடப்­படும். ஆரம்பப் பரு­வத்­தி­லேயே இரு மொழி ஆற்றலை வளர்ப்­ப­தும் அர்த்­த­முள்ள, ஈடு­படுத்­தக் கூ­டிய கற்றல் அனு­ப­வத்­தின் மூலம் சிறார்­களின் முழுமை­யான வளர்ச்­சிக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தும் இந்த பாலர் பள்­ளி­களின் இலக்கு என கல்வி அமைச்­சின் அறிக்கை குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!