1எம்டிபி தொடர்பிலான விசாரணை: வங்கி அதிகாரி வேலையிலிருந்து விலகினார்

மலே­சி­யா­வின் பிரச்­சினைக்­ கு­ரிய 1எம்டிபி தொடர்­பி­லான வங்கிக் கணக்­கு­களைக் கையாண்ட­தா­கக் கூறப்­படும் தனியார் வங்கி அதிகாரி வேலை­யி­லி­ருந்து வில­கி­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சுவிட்­சர்­லாந்து தனியார் வங்­கி­யான பிஎஸ்ஐ சிங்கப்­பூ­ரில் யாக் யேவ் சீ என்ற அந்த அதிகாரி மூத்த உதவித் தலைவ-ராக பணி­யாற்றி வந்தார். தற்போது 1எம்டிபி தொடர்­பில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்­ற­வி­யல் விசா­ரணையை அவர் எதிர்­நோக்­கு ­கிறார். "தற்போது வங்­கி­யில் அவர் இல்லை," என்று பிஎஸ்ஐ வங்­கி­யின் பேச்­சா­ளர் ஒருவர் தெரி­வித்­தார்.

கடந்த மாதம் சிங்கப்­பூர் உயர் நீதி­மன்றத்­தில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய விசா­ரணை­யில் பல ஆவ­ணங்கள் வெளியி­டப்பட்­டன. அப்போது இந்த விசா­ரணை­யில் முக்கிய நபராக யாக்கின் பெயர் அடி­பட்­டது. 1எம்டிபி தொடர்­பி­லான வங்கிக் கணக்­கு­களில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்­றப்­பட்ட நட­வ­டிக்கை­களை சிங்கப்­பூர் அதி­கா­ரி­கள் விசா­ரித்து வரு­கின்ற­னர். கடந்த ஆண்டு பிஎஸ்ஐ விசாரணை மேற்­கொண்ட­தால் திரு யாக் சம்ப­ளம் இல்லா ஐந்து மாதம் விடுப்­பில் சென்றார். சென்ற அக்­டோ­பர் மாதம் மீண்டும் பணிக்­குத் திரும்­பிய அவர் கடைசி மாதச் சம்ப­ள­மாக ஜனவரி 27ஆம் தேதி 83,000 வெள்­ளியைப் பெற்­ற­தாக நீதி­மன்ற ஆவ­ணங்கள் தெரி­விக் ­கின்றன. விசா­ரிக்­கப்­பட்­டு­வ­ரும் சில வங்கிக் கணக்­கு­கள் யாக்­குக்கு சொந்த­மா­னவை. இந்த வங்கிக் கணக்­கில் உள்ள சுமார் 9.7 மில்­லி­யன் வெள்ளி முடக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!