சூச்சியின் உதவியாளருக்கு நாடாளுமன்ற கீழ் அவை ஆதரவு

யங்கூன்: மியன்மாரில் திருவாட்டி ஆங் சான் சூச்சியின் கட்சி முன்மொழிந்த அதிபர் வேட்பாளரான டின் கியவிற்கு நாடாளுமன்ற கீழ் அவை அதன் அமோக ஆதரவைத் தெரிவித் துள்ளது. கீழ் அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 317 உறுப் பினர்களில் 274 பேர் டின் கியவிற்கு ஆதரவாக வாக் களித்திருந்தனர். திருவாட்டி சூச்சியின் உதவியாளரும் அவரது முன்னாள் கார் ஓட்டுநருமான 69 வயது டின் கியவ், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்பதை கீழ் அவை உறுதிப் படுத்தியுள்ளது. கீழ் அவையில் அவருக்கு ஆதரவாக பெரும் பாலானோர் வாக்களித் திருப் பதாக கீழ் அவை நாடாளுமன்ற சபாநாயகர் வின் மிண்ட் கூறினார். வரும் வாரத் தில் முழுமையான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்ற இரு அவை களிலும் அமோக ஆதரவைப் பெறும் ஒருவரே அந்நாட்டின் அதிபராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அதிபராவதற்கு மேலும் இருவர் போட்டிக் களத்தில் உள்ளனர். நாடாளுமன்ற மேலவையில் தேசிய ஜனநாயக லீக் கட்சி, சின் இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்ரி வான் தியுவை அதிபர் வேட்பாளராக பரிந்துரைத் துள்ளது. மற்றொரு வேட்பாளரை ராணுவம் இன்னமும் முன் மொழியவில்லை.

இருப்பினும் ஆங் சான் சூச்சியின் ஆதரவு இருப்பதாலும் தேசிய ஜனநாயக லீக் கட்சியுடன் வலுவான குடும்பத் தொடர்பு இருப்பதாலும் திரு டின் கியவ் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மற்ற இரு வேட்பாளர்கள் துணை அதிபர்களாகப் பொறுப் பேற்பார்கள். நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் டின் கியவ் போட்டியிடவில்லை என்ற போதி லும் ஆங் சான் சூச்சியின் நம்பிக்கைக்குரியவராக அவர் விளங்குகிறார். சூச்சியின் அறப் பணி நிறுவனத்தின் மூத்த நிர்வாகியாக அவர் இருக்கிறார்.

ஆங் சான் சூச்சியும் அவரது கட்சி முன்மொழிந்துள்ள அதிபர் வேட்பாளர் டின் கியவும் நாடாளுமன்றத்திற்கு வருகின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!