இரு கோல் முன்னிலையில் லிவர்பூல்

லிவர்பூல்: யூரோப்பா லீக் காற்பந்துத் தொடரின் காலிறுதிக்கு முந்திய சுற்று முதல் ஆட்டத்தில் லிவர்பூல் குழு 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனை டெட் குழுவைத் தோற்கடித்து முன்னிலை பெற்றுள்ளது. ஆன்ஃபீல்ட் விளையாட்டரங் கில் நடந்த இந்த ஆட்டத்தில் இன்னும் மோசமாகத் தோற்காத தற்கு யுனைடெட் குழு அதன் கோல்காப்பாளர் டாவிட் டி கியா விற்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. இந்த ஆட்டத்தை 'அனைத்து ஆட்டங்களின் தாய்' என்று தாம் வர்ணித்திருந்த நிலையில் யுனை டெட் குழுவிற்கு எதிராக லிவர்பூல் நிர்வாகியாக யர்கன் க்ளோப் பெற்ற முதல் வெற்றி இது.

அத்துடன், யுனைடெட் குழுவுடன் பொருதிய கடைசி ஐந்து ஆட்டங் களில் லிவர்பூல் வெற்றியை ஈட்டியதும் இதுவே முதன்முறை. இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் இவ்விரு குழுக்களும் முதல் நான்கு இடங்களுக்குள் இல்லாத நிலையில், யூரோப்பா லீக்கை வென்று அதன்மூலம் அடுத்த பருவ சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெறும் முனைப்பில் உள் ளன. யூரோப்பா லீக் வெற்றியாளர் நேரடியாக சாம்பியன்ஸ் லீக் கிற்குத் தகுதி பெறுவது இந்தப் பருவத்தில்தான் அறிமுகம் செய் யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தாம் நடுவராகப் பணியாற்றிய கடைசி 12 ஆட்டங்களில் 74 முறை மஞ்சள் அட்டையையும் ஆறு முறை சிவப்பு அட்டையையும் உயர்த்திய பெருமைக்குரியவரான ஸ்பெயினின் கார்லோஸ் கார்பலோ இந்த ஆட்டத்திலும் ஆறு வீரர் களை மஞ்சள் அட்டை காட்டி எச்சரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!