மொழி மாற்றம் செய்யப்படும் இளம் நாயகர்களின் படங்கள்

சிவ­கார்த்­தி­கே­ய­னின் படங்கள் அனைத்­தும் தயா­ரிப்­பா­ளர் களுக்கு நல்ல லாபம் தரு­வ­தா­கவே அமைந்து வரு­கிறது. இதுவரை நடித்த இவரின் அனைத்­துப் படங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசை­யில் அண்மை­யில் வெளியாகி சிறி­ய­வர்­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை அனை­வ­ரின் வர­வேற்பை­யும் பெற்ற 'ரஜி­னி­மு­ரு­கன்' திரைப்­ப­ட­மும் சேர்ந்­துள்­ளது. இப்­ப­டம் மூலம் இதுவரை மட்டுமே 50 கோடி ரூபாய் வசூல் ஆகி­யுள்­ளது. மிகப்­பெ­ரிய வசூலை அள்ளித் ­தந்த இப்­ப­டத்தை இப்போது கன்­ன­டத்­தில் மொழி மாற்றம் செய்ய உள்­ள­தாக கூறப்­படு­ கிறது. இது ­கு­றித்து விரைவில் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வரும் என எதிர்­பார்க்­கப்­படு­கின்றது.

இதேபோல், விஜய்­ சே­து­பதி நடித்­து­வ­ரும் 'தர்­ம­துரை' படமும் இந்­தி­யில் மொழி மாற்றம் செய்­யப்­படும் எனக் கூறப்­படு­கிறது. இப்­ப­டத்­தின் இசை வெளி­யீட்டு விழா விரைவில் நடை­பெ­ற­வுள்­ள­தாக இணை­யத்­த­ளங்களில் அறி­விப்பு வெளி வந்­துள்­ளது. விஜய்­ சே­து­பதி, தமன்னா, ஐஸ்­வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ‌ஷிவேதா, ராதிகா உள்பட பலர் நடித்­துள்ள இந்தப் படத்தைத் தேசிய விருது பெற்ற 'தென்­மேற்­குப் பரு­வக்­காற்று' படத்­தின் இயக்­கு­நர் சீனு ராமசாமி இயக்­கி­யுள்­ளார். யுவன்­சங்கர் ராஜா இசை­யமைத்­துள்ள இந்தப் படம் வரும் ஜூன் மாதம் வெளி­யா­கும் என எதிர்­பார்க்­கப் ­படு­கிறது. இந்­நிலை­யில் தமிழில் இந்தப் படம் வெற்றி பெற்றால் இந்தப் படத்தை இந்­தி­யில் மொழி மாற்றம் செய்ய திட்­ட­மிட்­டி­ருப்­ப­தா­க­வும் அதில் அமீர்­கானை நடிக்க வைக்க முயற்சி செய்­யப்­படும் என்றும் தயா­ரிப்பு தரப்­பில் இருந்து கூறப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!