மறுபரிசீலனையில் மின்தூக்கி விதிமுறைகள்

அண்மை­யில் ஏற்­பட்ட தொடர் மின்­தூக்கி விபத்­து­களை அடுத்து இங்­குள்ள மின்­தூக்­கிகள் பாது­காப்­பா­ன­தாக இயங்­கு­கின்ற­னவா என்­பதைச் சோதிப்­பது, அதற்­கான ஒழுங்கு விதி­முறை­களை மறு­ப­ரி சீ­லனை செய்­வது போன்ற செயல்­களில் அதி­கா­ரி­கள் இறங்­கி­யுள்­ள­னர். மின்­தூக்­கிகள் பாது­காப்­பாக இயங்­கு­வது உறுதி செய்­யப்­பட வேண்­டும் என்று அமைச்­சர் லாரன்ஸ் வோங், கட்டட, கட்­டு­மான ஆணை­யத்­தி­டம் கேட்­டுக்­கொண்டுள்ளார். சமூக வலைத்­த­ள­மான ஃபேஸ்­புக்­கில் அவர் இதனை பதி­வேற்­றம் செய்­துள்­ளார். அண்மைக் கால­மாக மின்­தூக்கி விபத்­து­கள் தொடர் நிகழ்­வா­கிக் கொண்­டி­ருக்­கின்றன. மின்­தூக்­கி­யின் சொந்தக்­கா­ரர்­கள், திறனா­ளர்­களின் உத­வி­யால் இந்த விபத்து நிகழ்ந்த மின்­தூக்­கிகள் பற்றி சோதனை மேற்­கொண்­டுள்­ள­னர். இருப்­பி­னும் புலன் விசா­ரணைகள் இன்­னும் நிறைவு பெறவில்லை.

இந்நிலை­யில், கட்டட, கட்­டு­மான ஆணை­யத்­தி­டம் பய­ணி­கள் மின்­தூக்­கிகளில் குறிப்­பாக வீவக கட்­ட­டங்களில் ஆணை­யத்­தின் தனிப்­பட்ட ஆய்­வு­களை மேற்­கொள்­ளும்படி கேட்­டுக்­கொண்­ டுள்­ள­தாக அமைச்­சர் வோங் தெரி­வித்­தார். "மின்­தூக்­கிகளில் ஆய்வு மேற்­கொள்­ளப்­படும் நேரங்களில் குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கு சற்று வச­தி­யின்மை ஏற்­ப­ட­லாம். "இருப்­பி­னும் பாது­காப்பே முக்­கி­யம் என்­பதை உணர்ந்து பொறுமை காக்க வேண்­டும்," என்று அமைச்­சர் வோங் கேட்­டுக் கொண்டார். நாம், நமது சோதனை­களை முழுமை­யாக மேற்­கொள்ள வேண்­டும். பாது­காப்­பில் எவ்­வித சம­ர­ச­மும் செய்து கொள்­ளக்­ கூ­டாது," என அமைச்­சர் வோங் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!