அதிபர் தேர்தலில் மீண்டும் டான் செங் போக் போட்டி

சிங்கப்பூரின் அடுத்த அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் நடக்க இருக்கிறது. தான் அதில் போட்டியிடப்போவதாக டாக்டர் டான் செங் போக் நேற்று அறிவித்தார். டாக்டர் டான் 2011ல் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த வர் என்பது குறிப்பிடத்தக்கது. "அதிபர் தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள் இருக்கின்றன. என் முடிவை இப்போது தெரிவிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். 2017 தேர்தலில் போட்டியிட நான் விரும்புகிறேன்," என்று டாக்டர் செங் போக் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். டாக்டர் டான், 1980 முதல் 2006ஆம் ஆண்டு வரையில் ஆயர் ராஜா தொகுதி மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின ராகச் சேவையாற்றியவர். அவர் சென்ற அதிபர் தேர்தலில் நான்கு முனைப் போட்டியை எதிர் நோக்கினார். அந்தத் தேர்தலில் அதிபர் டோனி டான் கெங் யாம் வென்றார்.

டாக்டர் டான் 7,382 வாக்குகள் குறைவாகப் பெற்று அதாவது 0.35% வாக்குகள் குறைவாகப் பெற்று தோற்றார். தேர்தலுக்கு எப்படி தயாரா கிறீர்கள் எனக் கேட்டபோது, "பல இடங்களுக்கும் நடந்துசெல் கிறேன். காப்பிக் கடைகளுக்குச் செல்கிறேன். உரை நிகழ்ச்சிகளை கேட்கிறேன். நானும் உரையாற்று கிறேன்," என்று அவர் கூறினார். எம்சிஏ ஆசியா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தின் கட்டடம் காமன்வெல்த்தில் இருக்கிறது. டாக்டர் டான் செங் போக்கின் மனைவி, அந்த நிறுவனத்துக்குத் தலைவராக இருக்கிறார். அந்தக் கட்டடத்தில்தான் செய்தியாளர்கள் கூட்டம் நடந்தது.

அதில் பேசிய டாக்டர் டான் செங் போக், 26 ஆண்டுகளில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலத்தில் தான் நிகழ்த்திய பல் வேறு சாதனைகளைக் கோடி காட்டினார். மக்கள் தேர்ந்து எடுக்கும் அதிபர் ஏற்பாட்டை பற்றி தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலை மையில் அமைந்துள்ள ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அரசமைப்புச் சட்ட ஆணையம் பரிசீலித்து வரும் வேளையில் டாக்டர் டான் செங் போக்கின் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

டாக்டர் டான் செங் போக் அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவிக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!