நஜிப்: மகாதீரின் மக்கள் பிரகடனம் சுயலாப நோக்கம் கொண்டது

கூச்சிங்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது அண்மையில் வெளியிட்ட மக்கள் பிரகடனம் உள்நோக்கம் கொண்டது என்று மலேசியப் பிரதமர் நஜிப் ராசக் தெரி வித்துள்ளார். அது மக்களுக்காக கொண்டு வரப்பட்டது அல்ல என்றும் திரு மகாதீரின் சுயலாபத்திற்காக கொண்டுவரப்பட்ட பிரகடனம் என்றும் திரு நஜிப் கூறினார்.

திரு மகாதீர் தலைமையிலான அந்தக் குழுவிற்கு நாட்டின் கிழக்குப் பகுதியான சரவாக் கிலிருந்து பிரதிநிதிகள் இல்லாத தால் அதனை மக்கள் தீர்மானம் எனக் கூறிவிட முடியாது எனவும் திரு நஜிப் குறிப்பிட்டார். "மக்கள் தீர்மானம்" என்ற பெயரில் மக்களைக் குழப்ப வேண்டாம் என்று திரு மகாதீரை திரு நஜிப் கேட்டுக்கொண்டார். "மக்கள் தீர்மானம் என்ற பெயரில் உள்நோக்கம் வேண் டாம். நீங்கள் செய்தது மக்களுக் காக அல்ல, உங்களுக்காக", என அவர் தெரிவித்தார். அந்தப் பிரகடனம் உறுதியான நோக்கம் கொண்டது அல்ல என்றும் மக்களின் சம்மதத்தைப் பெற்றதும் அல்ல என்றும் திரு நஜிப் குறிப்பிட்டார்.

மூன்று நாள் வருகையாக சரவாக் வந்துள்ள திரு நஜிப், நேற்று கூச்சிங்கில் ஒரு வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமது சொந்தக் கொள்கைகள் உண்மையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டது என்றும் திரு நஜிப் குறிப்பிட்டார்.

சரவாக் வந்துள்ள திரு நஜிப், கூச்சிங்கில் ஒரு வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார். படம்: தி ஸ்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!