டோனல்ட் டிரம்பின் பிரசாரக் கூட்டம் ரத்து

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசுக் கட்சி வேட்பாளரான டோனல்ட் டிரம்ப் சிகாகோவில் வெள்ளிக் கிழமை இரவு நடக்கவிருந்த பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்தார். சிகாகோவில் கூட்டம் நடை பெறுவதாக இருந்த இல்லினாய் பல்கலைக்கழக வளாகத்தில் திரண்டிருந்த டிரம்பின் ஆதரவாளர் களுக்கும் அங்கு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

டிரம்பின் ஆதரவாளர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. டிரம்பின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாகவும் அவரது எதிர்ப்பாளர்கள் டிரம்பை வெளி யேற்றுவோம் என்றும் கோஷ மிட்டனர். இதனால் போலிசார் தலையிட நேர்ந்தது.

ஆர்ப்பாட்டக் காரர்கள் சிலரை போலிசார் பலவந்தமாக வெளியேற்றிய போதிலும் கூட்டத்தினரை அவர் களால் கட்டுப்படுத்த முடிய வில்லை. இந்நிலையில் அன்று நடைபெறவிருந்த கூட்டத்தை டிரம்ப் ரத்து செய்துள்ளதாக அவரது பிரசாரக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார். சிகாகோ வந்துசேர்ந்த டிரம்ப், சட்ட அமலாக்க அதிகாரிகளை சந்தித்துப் பேசிய பின்னர் பிரசாரக் கூட்டத்தை இன்னொரு தேதிக்கு தள்ளிவைக்க முடிவு செய்ததாக அந்த உறுப்பினர் கூறினார்.

டோனல்ட் டிரம்பின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!