வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதை நிறுத்த மலேசியா முடிவு

கோலாலம்பூர்: மலேசியாவில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதை நிறுத்த அமைச்சரவை முடிவு செய் திருப்பதாக மலேசிய துணைப் பிரதமர் அகமட் சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார். 1.5 மில்லியன் பங்ளாதேஷ் ஊழியர்களை மலேசியாவுக்கு கொண்டு வரும் திட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார். ஊழியர்கள் தேவைப்படும் முதலாளிகள் தங்களிடம் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதிச் சீட்டு முடிவடையவிருந்தால் அதனை புதுப்பித்துக்கொள்ள விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் உள்துறை அமைச்சருமான சாகிட் கேட்டுக்கொண்டார்.

முதலாளிகள் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் தங்கள் ஊழியர்களுக்கான வேலை அனுமதிச் சீட்டுகளை புதுப்பித்துக்கொள்ள விண்ணப்பிக்க வேண்டும் எனறும் அவர் வலியுறுத்தினார். இதற்கு முன்பு முதலாளிகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப் பட்டிருந்ததாகவும் ஆனால் பல முதலாளிகள் இதனை புறக் கணித்ததால் தற்போது ஜூன் 30ஆம் தேதி வரையே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு சேர்க்க முடியவில்லை என்றால் அந்த வேலைக்கு உள்ளூர்வாசிகளைச் சேர்க்க மலேசிய முதலாளிகள் சம்மேள னத்தின் உதவியை நாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு சாஹிட் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!