சுதாஸகி ராமன்
அனைத்துலக மகளிர் தினத்தை ஒட்டி ஆண்டுதோறும் நடத்தப் படும் சுகாதாரம் தொடர்பான உரைகளை ஒன்றுவிடாமல் கேட்டு மகளிர் சார்ந்த மருத்துவப் பிரச் சினைகளைப் பற்றி மேலும் அறிந்து வருகிறார் 50 வயதான திருவாட்டி ஆன் இந்திராணி. 'அனைத்துலக மகளிர் தினம் 2016' கலந்துரையாடல் எனும் இந்த நிகழ்ச்சியில் இதயத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளைப் பற்றிய உரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த உரை நிகழ்ச்சியில் திருவாட்டி ஆன் இந்திராணியைப் போல் சுமார் 160 பேர் கலந்து கொண்டனர். 65 வயதுக்கு மேலான மாதர் களின் மரணத்திற்குக் காரணமாகும் நோய்களில் இதய நோய் முதலிடத்தில் இருப்பதால் இத யத்தைப் பாதிக்கும் பிரச்சினை களைப் பற்றியும் அவற்றைத் தடுக் கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதற்கான குறிப்புகளைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொண்டனர்.
நீ சூன் குழுத்தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினரும் சட்ட, உள்துறை அமைச்சருமான திரு கா. சண்முகம், கல்வி, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம், டாக்டர் லீ பீ வா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்ச்சி யில் கலந்துகொண்டனர்.
ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தி அமைச்சர் சண்முகம் பேசினார். சுகாதார உரையுடன் நடத் தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டு பொருளியல், மூப்படை யும் மக்கள்தொகை போன்ற தலைப்புகளை அலசி ஆராய்ந்து பார்வையாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கான தீர்ப்புகளைக் கண்டறிந்தனர்.
'அனைத்துலக மகளிர் தினம் 2016' கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்களுடன் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் (நடுவில்). படம்: நீ சூன் சவுத் சமூக மன்றம்