உட்லண்ட்ஸில் தற்காலிகப் பேருந்து நிலையம் திறப்பு

உட்லண்ட்ஸ் தற்காலிகப் பேருந்து நிலையம் நேற்று திறந்து வைக்கப் பட்டது. பல புத்தாக்க அம்சங்கள் அப் பேருந்து நிலையத்தில் நிறைந்து உள்ளன. பேருந்து நிலையத்தின் உள்ளேயே பயணிகளை ஏற்றிச் செல்லும் சிறிய மின் வண்டிகள் அங்கு இடம்பெற்றிருப்பது இது வரை உள்ள பேருந்துநிலைய வசதிகளில் ஆகப் புதியது என்று சொல்லப்படுகிறது. மேலும், பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் காத்திருப்பு இடத்தைச் சென்றவடைவதற்கு உத வும் வகையில் கைப்பிடிக் கம்பி களில் 'பிரெய்ல்' முறை குறியீடுகள் அமைக்கப்பட்டு இருப்பதும் முதல்முறை என்று சொல்லப் படுகிறது.

பேருந்து நிலையத்தையும் எம்ஆர்டி நிலையத்தையும் இணைக்கும் சக்கர நாற்காலி சரிவுப் பாதை அங்கு இடம்பெற்றிருப்பது மற்றோர் அம்சம். பயணிகளோடு பணியாட்களுக்கும் அந்தத் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் புத்தாக்க வசதிகள் உண்டு. வரிசை எவ்வளவு தூரம் நீண்டிருக்கிறது என்பதற்கேற்ப அதிகமான பேருந்துகளை அனுப்பு வதில் அவர்களுக்கு உதவும் கேம ராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பயணிகளின் வரிசைக்கு மேல் அமைக்கப்பட்டு இருக்கும் கண் காணிப்பு கேமராக்கள் வழியே பணியாட்கள் கூட்ட நிலைமையை அறிவர். 12 மீட்டர் நீள வரிசை அல்லது 70 பயணிகளுக்கு மேல் காத்திருந்தால் ஈரடுக்குப் பேருந்தை அனுப்புவது பற்றி அவர்கள் முடிவெடுப்பர். அல்லது அடுத்தடுத்து பேருந்துகளை அனுப்பி வைக்கவும் அவர்கள் முடிவெடுக்க இந்த கேமராக்கள் உதவும். இதுபோன்ற பல்வேறு புதிய அம்சங்களுடன் உட்லண்ட்ஸ் தற்காலிகப் பேருந்து நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

பயணிகளை இறக்கிவிட பேருந்து நிலையத்திற்குள் காலி யான தளத்தையும் பேருந்தை நிறுத்துவதற்கான இடத்தையும் பேருந்து ஓட்டுநர்கள் எளிதில் கண்டறிவதற்கு வசதியாக பெரிய எழுத்துகளுடன் கூடிய விவேக பேருந்து வழிகாட்டிப் பலகையும் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காலியாக இருக்கும் இடங் களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குச் செலவிடப்படும் நேரத்தை இது குறைக்கும். உட்லண்ட்ஸ் வட்டாரப் பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணி கள் நடப்பதால் 2019ஆம் ஆண்டு வரையில் தற்காலிகப் பேருந்து நிலையம் இயங்கும். உட்லண்ட்ஸ் வட்டாரப் பேருந்து கள் நாளொன்றுக்கு சுமார் 400,000 பயணிகளுக்குச் சேவை யாற்றுகின்றன.

பயணிகள் வசதியை மையமாகக் கொண்டு முதன்முதலாக உருவாக்கப்பட்டு உள்ள புத்தாக்க அம்சங்களை போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் அதிகாரிகளும் பார்வையிடு கின்றனர். - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!