சிங்கப்பூர் எழுத்தாளர் விழா இன்று தொடக்கம்

முஹம்மது ஃபைரோஸ்

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா இன்று மாலை விக்டோரியா அரங் கில் அதிகாரபூர்வமாகத் தொடங்க வுள்ளது. 1986ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா இவ்வாண்டு முதன்முறையாக 'அறம்' எனும் தமிழ்ச் சொல்லை கருப்பொருளாகக் கொண்டு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக தொழில் மற்றும் கலாசார, சமூக, இளையர் துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் விழாவின் தொடக்கநிகழ்வில் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொள்கிறார். இம்மாதம் 3ஆம் தேதியில் இருந்து 12ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும் எழுத் தாளர் விழாவில் இணைந்துள்ள தமிழ் முரசு நாளிதழ், தேசிய கலைகள் மன்றத்துடன் சேர்ந்து 3 நிகழ்ச்சிகளைப் படைக்க உள்ளது. விழாவின் தொடக்க நிகழ்ச்சி யில் தமிழகத்தின் பெயர்பெற்ற வில்லுப்பாட்டு கலைஞர் திருமதி பாரதி திருமகனின் வில்லுப் பாட்டு முன்னோட்ட அங்கமும் இடம்பெறும். இவர் புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறு முகத்தின் மகள் ஆவார். இன்றிரவு 8 மணிக்கு நவீன இசையுடன் தமிழ் கவிதைகளைப் பார்வையாளர்கள் சுவைக்கலாம்.

தி ஆர்ட்ஸ் ஹவுஸில் உள்ள பிளே டென் அரங்கில் இடம்பெறும் 'கவிதைகளின் அடிநாதம்: இசை யின் கவித்துவம்' எனப்படும் இந் நிகழ்ச்சியில் பாரதியார், பாரதி தாசன் கவிதைகளுடன் சிங்கப் பூரின் மூத்த எழுத்தாளர்கள் சிங்கை முகிலன், அமலதாசன், முருகதாசன், வளரும் கவிஞர்கள் இளஞ்சேரன், ஹரிணி வி. போன் றோரின் கவிதைகளை 'ஜாஸ்', 'ராக்' இசையுடன் கேட்கலாம். இந்தப் படைப்புகளைப் படைக் கும் இளம் இசைக்குழுக்களான 'ராகா ஜாஸ்', 'பாக்ஸ்சைல்ட்' ஆகிய இரண்டும் சிங்கப்பூர் தமிழ்க் கவிதைகளுக்கு இசை கூட்டியுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் $10 மட்டுமே. 10 நுழைவுச்சீட்டுகளுக்கு மேல் வாங்கினால் 30% கழிவு உண்டு. நாளை இரவு 7 மணிக்கு விக்டோரியா அரங்கில் நடைபெற வுள்ள 'நாட்டுப்புறக் கலை வளர்க் கும் கதை மரபு' எனும் தமிழ் முரசின் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் திருமதி பாரதியின் சிறப்புக் குழு வில்லுப்பாட்டை வழங்குகிறது.

பண்டைய போர்க்கருவியான வில்லை இசைக் கருவியாக்கி அதிலிருந்து இசை எழுப்பி, பாட லுடன் சொல்லப்படும் கதைதான் வில்லுப்பாட்டு. சிங்கப்பூரின் மிகத் தொன்மையான படைப்பான 'குதி ரைப் பந்தய லாவணி'யை அக்குழு வில்லுப்பாட்டாக வழங்கும். அத்துடன், பிரபல உள்ளூர் நாடகக் குழுவான அவாண்ட் தியேட்டர் நாடகக் குழு கண்ண பிரானின் பீடம் குறுநாவலை ஓரங்க நாடகமாகப் படைக்கிறது. பாஸ்கர் கலைக் கழகம் முதல் முறையாக சிலப்பதிகாரத்தை தெருக்கூத்தாகப் படைக்கிறது. இந்த மூன்று அங்கங்களையும் பல்கலைக்கழக மாணவர்களான சரவணன் சண்முகம், சையத் அஷரத்துல்லா ஆகிய இருவரும் வழங்கும் கதாகாலட்சேபம் ஒன்றி ணைக்கும். தமிழர் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் ஓரங்க நாடகம், தெருக் கூத்து, வில்லுப்பாட்டு, கதாகாலட் சேபம் என நான்கு மாறுபட்ட தமிழ்க் கலைப்படைப்புகள் ஒன் றன்பின் ஒன்றாக விக்டோரியா அரங்கில் களைகட்டும். கட்டணம் $20 மட்டுமே. நுழைவுச்சீட்டுகளை 'சிஸ்ட்டிக்'கில் பெறலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!