மறுவிற்பனையில் அவசரம் காட்டாத வீட்டு உரிமையாளர்கள்

குறைந்தபட்ச குடியிருப்புக் கால மான ஐந்தாண்டுகள் முடிந்து வீடுகளை மறுவிற்பனை செய்ய தகுதி பெற்றும் அதிகமான வீடமைப்பு வளரச்சிக் கழக (வீவக) வீட்டு உரிமையாளர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஆண்டில், குறைந்த பட்ச குடியிருப்புக் காலம் முடிந்த முதல் ஆண்டிற்குள் 388 வீடுகள் மறுவிற்பனை செய்யப்பட்டதாக வீவக தெரிவித்துள்ளது. அப்படி, குறைந்தபட்ச குடியி ருப்புக் காலம் முடிந்து வீடுகளை இனி விற்கலாம் என்ற தகுதியை கடந்த ஆண்டில் 6,623 வீடுகள் பெற்றன. ஆனாலும் அவற்றில் சுமார் 6% வீடுகள் மட்டுமே மறுவிற்பனை செய்யப்பட்டன. முந்தைய 2014ஆம் ஆண்டில் இந்த விகிதம் 11 விழுக்காடாக இருந்தது.

மறுவிற்பனைச் சந்தையில் நிலவும் மந்தநிலையே இதற்குக் காரணம் என்பது சொத்துச் சந்தை நிபுணர்களின் கருத்து. முந்தைய ஆண்டுகளில் வீடுகளை விற்கலாம் என்ற தகுதி கிட்டியதும் உடனடியாக பலரும் வீடுகளை விற்றனர். 2010 முதல் 2012 வரை, அத்த கைய 1,000க்கும் அதிகமான வீடுகள் மறுவிற்பனை செய்யப்பட்டன. அந்த ஆண்டுகளில், குறைந்தபட்ச குடியிருப்புக் காலம் முடிந்து வீடுகளை விற்கலாம் என்ற தகுதியைப் பெற்ற ஓராண்டிற்குள் 12% முதல் 18% வரையிலான வீடுகள் மறுவிற் பனையின் மூலம் கைமாறின.

ஆனால், கடன் கட்டுப்பாடு உள்ளிட்ட சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள் அறி முகமானதும் 2013 பிற்பாதியில் வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் குறையத் தொடங்கின. அந்த ஆண்டில், குறைந்தபட்ச குடியிருப்புக் காலம் முடிந்து வீடுகளை விற்கும் தகுதியைப் பெற்ற முதல் ஆண்டிற்குள் 5.5% வீடுகள் மட்டுமே மறுவிற்பனை செய்யப்பட்டன.

மாறாக, அத்தகைய வீடுகள் உள்வாடகைக்கு விடப்படும் விகிதம் 2010 முதல் கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருந்து வரு கிறது. சென்ற ஆண்டில், குறைந்தபட்ச குடியிருப்புக் காலம் முடிந்த முதல் ஆண் டிற்குள் 259 வீடுகள் உள்வாட கைக்கு விடப்பட்டன என்று வீவக தகவல்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!