காரை முந்தும் பேருந்து, ரயில்

சிங்கப்பூரில் பத்தில் ஆறு பேர் பேருந்து அல்லது ரயில் மூலம் வேலைக்குச் செல்கிறார்கள். கார் இருந்தும் அதை விட்டுவிட்டு பொதுப் போக்குவரத்தை நாடும் சிங்கப்பூரர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து தங்களுக்கு மனநிறைவாக இருக்கிறது என்று சொல்லும் மக்களின் விழுக்காடும் கூடி வருகிறது. கடந்த 2015ல் இது 91.8% என்பது குறிப்பிடத்தக்கது.

நேரத்தில் வேலைக்குச் செல்ல பேருந்துகளை நம்பிப் போகலாம் என்று பயணிகள் சொல்கிறார்கள். அதோடு, பேருந்துக்குக் காத்திருக்கும் நேரமும் குறைந்துவிட்டது. அதிக நேரம் காத்திருக்க வேண்டாம் என்றும் முன்பைவிட மிக அதிக மக்கள் கூறுகிறார்கள். சிங்கப்பூரில் இலகு ரக ரயில்களில் அன்றாடம் பயணி கள் 152,000 தடவை செல்கிறார்கள். இது 10.9% அதிகரிப்பு. எம்ஆர்டி ரயில்களில் இந்த எண்ணிக்கையும் விழுக்காடும் முறையே 2.9 மில்லியனாகவும் 4.2% ஆகவும் இருக்கின்றன. பேருந்துகளில் பயணிகள் ஒரு நாளுக்கு 3.9 மில்லியன் தடவை போகிறார்கள், வருகிறார் கள். இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டின் அளவைவிட 3.7% அதிகம்.

சென்ற ஆண்டில் 21.9% மட்டும், அதாவது சுமார் 470,000 பேர் மட்டும் காரில் வேலைக்குச் சென்றனர். இந்த அளவு 2010ல் 24.8% ஆகவும் 2005ல் 22.9% ஆகவும் இருந்தது. டாக்சி பயணமும் 2015ல் குறைந்தது. அன்றாட சராசரி டாக்சி பயணம் 1% குறைந்து 1.01 மில்லியனாக இருந்தது. நிலப் பற்றாக்குறை நிரந்தரமான சிங்கப்பூரில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கார் வாங்கி வைத்துக் கொள்ள செலவும் அதிகம். இந்தச் சூழலில் ஆய்வுகள் மூலம் இவை எல்லாம் தெரியவந்துள்ளன.

சிங்கப்பூரில் வேலைக்கு அல்லது வேறு பணி நிமித்தம் தங்கள் வீட்டைவிட்டு வெளியே கிளம்பும் பயணிகள் மழையில் நனையாமல், வெயிலில் காயாமல் அதிக தூரம் நடக்காமல், தடைபடாமல், தலைகூட கலையாமல் வசதி யாகச் சென்று வருவதை உறுதிப்படுத்த அரசாங்கம் அமலாக்கி வருகின்ற திட்டங்கள், ஏற்பாடுகளின் பலா பலனாகத்தான் பயணிகளின் மனதில் காரை விஞ்சி பேருந்தும் ரயிலும் முக்கிய இடத்தைப் பிடித்துவருகின்றன.

கடந்த 15 ஆண்டுகளில் மூன்று புதிய ரயில் கட்டமைப்பு கள் சேவையாற்றத் தொடங்கின. 2003 முதல் செயல்படும் மத்திய சிங்கப்பூரை வடகிழக்குப் பகுதியுடன் இணைக்கும் வடகிழக்கு வழித்தடம்; கடந்த 2011 முதல் மத்திய சிங்கப்பூர், போன விஸ்தா, பாய லேபார் ஆகிவற்றை உள்ளடக்கும் வட்ட ரயில் பாதை; சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கி செயல்படும் புக்கிட் தீமா முதல் சைனாடவுன் வரைப்பட்ட டௌன் டவுன் ரயில் பாதை ஆகிய அந்த மூன்று ரயில் வழித் தடங்கள் மக்களை எடுத்த எடுப்பிலேயே கவர்ந்துவிட்டன.

இந்த வழித்தடங்கள் ஒருபுறம் இருக்க, பல்வேறு வழித் தடங்களிலும் புதிய ரயில்களின் எண்ணிக்கையும் குறிப் பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ரயில்கள் ஒருபுறம் இருக்க, பேருந்துக் கட்டமைப்பை மேம்படுத்த 2012ல் பேருந்து சேவை மேம்பாட்டுச் செயல் திட்டம் என்ற கோடானுகோடி வெள்ளி பெருந்திட்டம் அமலானது. புதிதாக 1,000 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த வழிவகுக்கும் இந்தத் திட்டத்தின்படி இதுவரை யில் மூன்றில் ஒரு பங்கு புதிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பேருந்து சேவையைத் தனியார் நிறுவனங்களும் வழங்க ஏற்பாடுகள் இருக்கின்றன.

சிங்கப்பூர் கார்கள் நிரம்பி தேங்காத நாடாக, சுற்றுச் சூழலுக்குத் தோழமையான நாடாக, மக்கள் நிரம்பி வாழும் நாடாகத் திகழ வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. இந்த விருப்பமே மக்களின் விருப்பம் என்பதற்கான அறி குறியாகத்தான் ஆய்வு முடிவுகள் இருக்கின்றன. மக்கள் பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுக்க சிறப்பான ஏற்பாடுகளும் செம்மையான நிர்வாகமும் காரணம். இருந்தாலும் ரயில்கள் அடிக்கடி தாமதமடையும் குறைபாடுகளை அவ்வப்போது எதிர்நோக்க வேண்டிய நிலை இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

இந்தக் குறையையும் அகற்றிவிட்டால், சிங்கப்பூரில் கார்கள் அறவே நெருங்க முடியாத தொலைவுக்குப் பேருந்தும் ரயிலும் மக்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்து, 'பொதுப் போக்குவரத்து நாடு' என்ற சாதனை இடம்பெறும் என்பது திண்ணம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!