அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்

ரெடிங்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ண காற்பந்துப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்குள் கிறிஸ்டல் பேலஸ் நுழைந்து உள்ளது. காலிறுதி ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது கிறிஸ்டல் பேலஸ் இரண்டு கோல்களைப் போட்டு 2=0 எனும் கோல் கணக்கில் இரண்டாம் நிலை லீக்கில் போட்டியிடும் ரெடிங் குழுவை வீழ்த்தியது. முதல் பாதி ஆட்டத்தில் இரு குழுக்களும் எவ்வளவு முயன்றும் கோல் ஏதும் போட முடியாமல் தவித்தன. இடைவேளையின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது. பிற்பாதியிலும் பந்து வலைக்குள் நுழையாது என்று அரங்கில் கூடியிருந்த வர்கள் நினைத்தபோது ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் கிறிஸ்டல் பேலசுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

கிறிஸ்டல் பேலஸ் குழுவின் யானிக் பொலாசியை பெனால்டி எல்லைக்குள் கீழே விழச் செய்த ரெடிங்கின் ஜேக் ஹூப்பர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதன் விளை வாகக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கபாயே கோல் போட்டார். இந்த அதிர்ச்சியிலிருந்து ரெடிங் மீண்டு வருவதற்குள் கிறிஸ்டல் பேலசின் இரண்டாவது கோல் புகுந்தது.

ஆட்டம் முடிய ஒரு சில வினாடிகள் மட்டுமே இருந்தபோது மாற்று ஆட்டக்காரர் கேம்பல் பந்தை வலைக் குள் அனுப்பி கிறிஸ்டல் பேலசின் வெற்றியை உறுதிப்படுத்தினார். "பெனால்டிக்கு முன்பே நாங்கள் ஆட்டத்தைக் கைப்பற்றியிருக்க வேண்டும். எஃப்ஏ கிண்ணத்தில் சிறப்பாக செயல்படும் கிறிஸ்டல் பேலஸ் பிரிமியர் லீக்கில் பதற்றத்துடன் உள்ளது," என்றார் கிறிஸ்டல் பேலஸ் நிர்வாகி ஆலன் பார்டு.

ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டுமே எஞ்சியிருக்க, கிறிஸ்டல் பேலசின் இரண்டாவது கோலைப் போடும் கேம்பல் (வலது). பந்து வலைக்குள் செல்லாமலிருக்க ரெடிங்கின் கோல்காப்பாளர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!