கோல்கள் விடாத புஃபோன்; வெளுத்துக் கட்டும் யுவெண்டஸ்

மிலான்: இத்தாலிய லீக்கில் யுவெண்டஸ் குழு வலுவான முன்னிலை வகிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அதன் கோல்காப்பாளர் ஜியான்லுகி புஃபோன். கடந்த 926 நிமிட ஆட்ட நேரத்தில் அவர் ஒரு கோலைக்கூட விடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கோல் கம்பங்களுக்கு நடுவில் புஃபோன் இருக்கும்போது எதிர் அணியின் தாக்குதல் ஆட்டக் காரர்கள் கோல் போட முடியாமல் திணறுகின்றனர். அதே சமயத்தில் யுவெண்டசின் மற்ற ஆட்டக்காரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அது சஸ்சுவோலோ குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்து மூன்று புள்ளிகளைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலின் இரண்டாவது ஆட்டத் தில் இருக்கும் நெப்பலியைவிட யுவெண்டஸ் குழு கூடுதலாக ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ளது. சஸ்சுவோலோவுக்கு எதிரான ஆட்டம் டுரின் நகரில் இருக்கும் யுவெண்டசின் சொந்த அரங்கில் நடைபெற்றது. ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் யுவெண்டசின் பாவ்லோ டைபாலா வலை நோக்கி அனுப்பிய பந்து கோலானது.

கோல்களை விடாமல் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் மகிழ்ச்சியை சக ஆட்டக்காரர்களுடன் கொண்டாடும் புஃபோன். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!