அதிமுக ஆட்சியால் தமிழகத்துக்கு தலைக்குனிவு: கவலைப்படும் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி யால் தமிழகத்துக்குத் தலைக் குனிவு ஏற்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் அண்மைய ஆய்வின் வழி ஊழலில் தமிழகம் முதலிடம் வகிப்பது தெரியவந்துள்ள தாகத் தமது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். "லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தமிழகத்தில் தொழில் தொடங்க முடியும் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் அப்பட்டமாக வெளிப் படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சி யில் தமிழகம் தொழில்துறையில் எந்த அளவிற்கு மோசமாக சீர் குலைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஆய்வு தெளிவாக்குகிறது.

"தமிழகத்தை முதன்மை மாநில மாக்கப்போவதாக கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்லவி பாடி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந் தார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தொழிற்சாலைகள் அமைக்க வருவோரிடம் லஞ்சம் பெறுவதில் மட்டும்தான் அதிமுக ஆட்சியில் தமிழகம் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று முதன்மை மாநிலமாக மாறியிருக்கிறது," என்று ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். தொழில் வளர்ச்சி குறித்து அதிமுக அரசு துளியும் அக்கறை காட்டவில்லை என்று கூறியுள்ள அவர், அதிமுக அரசு விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என்றார். "இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் மத்தியில், அதிமுக ஆட்சியால் தமிழகத்திற்கு ஏற்ப டுத்தப்பட்ட தலைக்குனிவு திமுக ஆட்சியில் அகற்றப்பட்டு, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்," என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!