பீதியில் இலியானா

நடிகை இலியானா 'பார்பி' என்ற இந்திப் படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்த பிறகும் கடந்த ஓர் ஆண்டாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இந்நிலையில், தற்போது அக் ஷய்குமார் ஜோடியாக 'ரஸ்டம்' என்ற படத்தில் நடிக்கிறார் இலியானா. புதிய பட வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தவர் தற்போது சிலர் கிளப்பிவிட்ட சர்ச்சையால் பயத்தில் இருக்கிறார். 'அக் ஷய்குமாருடன் நடித்த தென்னிந்திய நாயகிகள் பின்னடைவைத்தான் சந்தித்திருக் கிறார்கள். நீ உஷாராக இரு' என்று தோழிகள் கூறியதே அவரது பயத்துக்குக் காரணம். அக் ஷய்குமாருடன் 'கில்லாடி 789' படத்தில் ஜோடி போட்ட அசின், 'ஸ்பெஷல் 26' படத்தில் ஜோடி போட்ட காஜல் அகர்வால், 'பேபி' படத்தில் ஜோடியாக நடித்த டாப்சி உள்ளிட்ட மூவருக்குமே அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அவர்களைப்போல் தனது நிலையும் ஆகிவிடுமோ என்று பீதியில் கலங்கி போய் இருக்கி றாராம் இலியானா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!