பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிப்பு: திருநாவுக்கரசர்

சென்னை: மத்திய அரசு கடந்த ஆண்டு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து புதன்கிழமை சென்னை யில் நடைபெற்ற பொதுக் கூட்டத் தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த ஓராண்டில் பொது மக்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவ தாகக் குறிப்பிட்ட அவர்,

மத்திய அரசு நிறைய தவறுகளைச் செய்து வருவதாகச் சாடினார். "குதிரை சவாரி அரசியலில் இனி தமிழக காங்கிரஸ் ஈடு படாது. மாறாக, தனித்துச் செயல் படுவோம். அதற்கேற்ப போராட்டங் கள், பொதுக்கூட்டங்கள் போன் றவை தொடர்ந்து நடத்தப்படும்," என்றார் திருநாவுக்கரசர். மக்கள் எதிர்கொண்ட பிரச்சி னைகளை மத்திய அரசு நிவர்த்தி செய்யவில்லை என்று குறிப்பிட்ட அவர், தவறு செய்துவிட்டதை ஒப்புக் கொள்ள பிரதமர் மோடியால் முடியவில்லை என்றார். "பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்டவற்றால் பிரதமர் மோடி வீழ்ச்சிக்கு ஆளா கியுள்ளார். இதனை உணர்ந்து தான் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களான அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் அவரை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

தலைவர்கள் சந்திப்பு: திமுக, காங்கிரஸ் உறவில் திடீர் விரிசல் சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதி இடையேயான சந்திப்பு, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி ஒருமுறை நேரில் வந்து திமுக தலைவரின் உடல்நலம் குறித்து விசாரித்தால் நன்றாக இருக்கும் என திமுக தலைமை கேட்டுக் கொண்டதாக வும், அதன் பேரிலேயே இரு தலை வர்களின் சந்திப்பு நிகழ்ந்ததாகவும் தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து அறிந்த பிறகே காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாகவும், இதனால் திமுக தங்களை ஒதுக்குவதாக காங்கிரஸ் தலைமை கருதுவதாக வும் கூறப்படுகிறது. திமுக, காங்கிரஸ் உறவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விரிசல் பெரிதாகுமா? என்பது ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே அமையும் என்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள். இரு கட்சிகளுக்கு இடையே யான உறவில் விரிசல் ஏற்பட் டுள்ளது என்பதற்குச் சான்றாக சில விஷயங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!