தனியார் வீட்டு வாடகை உயர்வு; வீவக வீட்டு வாடகை சரிவு

தரைவீடு அல்லாத தனியார் வீடுகளின் வாடகை நவம்பர் மாதத் துடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் 0.1 விழுக்காடு உயர்வு கண்டது. அதே நேரத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு களின் வாடகை கடந்த மாதம் 0.6 விழுக்காடு சரிவு கண்டது. எஸ்ஆர்எக்ஸ் சொத்து நிறுவனம் இந்தப் புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டது. மூவறை வீவக வீட்டின் வாடகை 0.6 விழுக்காடு சரிந்த வேளையில் நாலறை, ஐந்தறை வீடுகளின் வாடகை 0.8 விழுக்காடு இறக்கம் கண்டது. எக்சி கியூட்டிவ் வீடுகளின் வாடகை எந்த மாற்றமும் இல்லாமல் நிலை யாக இருந்தது.

டிசம்பர் மாத உயர்வுடன் சேர்த்து தனியார் வீடுகளின் வாடகை 2015ஆம் ஆண்டில் 5.4 விழுக்காடு சரிவு கண்டுள்ளது. 2013ஆம் ஆண்டு ஜனவரியின் உச்சத்தோடு ஒப்பிடும்போது வாடகை 15 விழுக்காடு சரிந்து உள்ளது. வீவக வீடுகளின் வாடகை களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு முழுவதும் 4 விழுக்காடு இறக்கம் கண்டன. 2013ஆம் ஆண்டு உச்சத்தோடு ஒப்பிடும் போது அது 8.6 விழுக்காடு சரிவு. டிசம்பர் மாதத்தில் 3,093 தனியார் வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. நவம்பர் மாதத்தின் 3,325 வீடுகளைவிட அது 7 விழுக்காடு குறைவு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!