தொகுதிப் பங்கீடு: சோனியாவுடன் இளங்கோவன் ஆலோசனை

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆலோசனை நடத்தினார். நேற்று டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கேட்டுப்பெற வேண்டிய தொகுதிகள் குறித்து இருவரிடமும் இளங்கோவன் விவரித்ததாகத் தெரிகிறது. மேலும் வேட்பாளர் தேர்வு தொடர்பில் தமது கருத்துகளை அவர் முன்வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாததால், தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கோர இருப்பதாகத் தெரிகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!