வெளிநாட்டு ஊழியர்களை நெரிசலில் தங்க வைத்தவர் மீது குற்றச்சாட்டு

‌ஷுவாங் லின் கட்டுமான நிறுவனம் அங்கு பணிபுரிந்த 18 வெளிநாட்டு ஊழியர்களை நெரிசல் அதிகமான இடத்தில் தங்கவைத்த குற்றச்சாட்டை அந்நிறுவனத்தைச் சேர்ந்த லி டான் எதிர்நோக்குவதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. 'ஓஎஃப்டபுள்யூஏஎஸ்' எனும் இணைய வெளிநாட்டு ஊழியர் முகவரி சேவையில் 22 ஊழியர்களுக்கு பொய்யான முகவரிகளை அந்த நிறுவனம் அளித்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில் வெளிநாட்டு ஊழியர்களைத் தங்க வைப்பதற்குப் பொறுப்புவகிக்கும் லி டான், 34, மீது சென்ற மாதம் 31ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது. நகர மறு சீரமைப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலை மீறி எட்டுக்கும் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். லி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றசாட்டுக்கும் $10,000 வரை அபராதம், 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

அந்நிறுவனம் எதிர்நோக்கும் 22 குற்றச்சாட்டுகளுக்கும் தலா $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். தங்குமிடப் பிரச்சினை இருக்கும் ஊழியர்கள் அது குறித்து தங்களது முதலாளிகளிடம் முறையிடலாம். தேவைப்பட்டால் வெளிநாட்டு ஊழியர் மையத்தை 65362692 என்ற எண்ணிலோ அல்லது மனிதவள அமைச்சை 64385122 என்ற எண்ணிலோ அழைக்கலாம். பொதுமக்கள் mom_fmmd@mom.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் மனிதவள அமைச்சைத் தொடர்புகொள்ளலாம். அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!