'அம்மா கணக்கு' என்ற பெயரில் வெளியாக உள்ளது புதிய படம். அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். இந்தியில் 'நில் பேட்டி சன் னாட்டா' என்ற பெயரில் தயாரான இப்படம், அடுத்தகட்டமாக தமிழிலும் படமாக்கப்பட்டுள்ளது. அமலா பால், ரேவதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். கதையில் அப்படி என்ன சிறப்பு? "ஒரு அம்மாவுக்கும் மகளுக் கும் இடையில் நடக்கும் விஷயங் கள்தான் கதை. பொதுவாகப் பெற்றோருக்கு குழந்தையின் உலகத்துக்குள் தங்களை இணைத்துக்கொள்ளவும் அவர் களைப் புரிந்து கொள்ளவும் நிறைய பொறுமை தேவைப்படும்.
இந்த விஷயத்தை ஒரு அம்மா வின் பார்வையில் இருந்து சொல் லும் படம்தான் 'அம்மா கணக்கு'. அமலா பால் - ரேவதி இரு வரையும் தேர்வு செய்தது ஏன்? "அம்மா, மகள் கதை என்றதும் எல்லோருமே ரேவதி அம்மாவாகவும் அமலா பால் மகளாகவும் கற்பனை செய்கிறார்கள். ஆனால், அம்மா வேடத்தில் நடிப்பது அமலா பால். 14 வயதுக் குழந்தைக்கு அம்மாவாக எப்படி நடிப்பை வெளிப்படுத்த வேண்டுமோ, அதைக் கச்சிதமாகச் செய்துள்ளார். இதற்காக நிறைய அம்மாக்களிடம் பேசி குறிப்புகளும் எடுத்துக்கொண்டார். "ரொம்ப சவாலான வேடம், அற்புதமாக பண்ணியிருக்கிறார்.