‘ராஜதந்திரம்’ இரண்டாம் பாகத்திற்கும் இளையராஜா இசை

வீரா, ரெஜினா, சிவா, அஜய் பிரசாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் அமித் இயக் கத்தில் வெளியான படம் 'ராஜதந்திரம்'. செந்தில் வீராசாமி தயாரித்த இந்தப் படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் விநியோகம் செய்தது. கடந்த ஆண்டு வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வெற்றி யைப் பெற்றது. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தின் தயாரிப்பாளராக இருந்த செந்தில் வீராசாமி இரண்டாம் பாகத்தின் மூலம் இயக்குநராக அறி முகமாகி இருக்கிறார்.

முதல் பாகத்தின் போது பாடல்கள் மூலமாகவும், சுவ ரொட்டிகள் மூலமாகவும் ரசிகர்களைக் கவர்ந்தனர் இப்படக்குழுவினர். அச்சமயம் படத்தை விளம்பரப்படுத்த வித்தியாசமான யுக்திகளைக் கையாண்ட இப்படக்குழுவினர், இரண்டாம் பாகத்திலும் புதிய யுக்தியை கையாள உள்ளனர். அதன்படி, இதுவரை தமிழ்ச் சினிமாவில் யாரும் எடுக்காத புது முயற்சியாக படத்தின் முதல் 6 நிமிடக் காட்சிகளை மட்டும் இணையத்தளத் தில் வெளியிட்டுள்ளனர். இதில் கூடுதல் விஷயம் என்ன வெனில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதுநாள் வரை இளையராஜாதான் இப்படத்தின் இசையமைப்பாளர் என்ற செய்தியை ரகசியமாக வைத்திருந்த படக்குழு இப்போதுதான் தகவலைக் கசிய விட்டுள்ளனர். இளையராஜாவின் இசை படத்திற்கு மேலும் பலமாக இருக்கும் எனக் கூறப் படுகிறது. முன்னதாக, இப்படத்தின் 6 நிமிட காட்சியை நடிகர் சிம்பு பார்த்து ரசித்ததுடன் படக்குழுவினரை வெகு வாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

'ராஜதந்திரம்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் வீரா, ரெஜினா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!