தனியாக வாழும், எளிதில் மற்றவர் களால் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் மூத்த குடிமக்களை இந்த ஆண்டு இறுதிக்குள் சமூக நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபடச் செய்வது சமுதாய குடும்ப அமைச்சின் இலக்கு என்று தெரிவித்தார் அமைச்சர் டான் சுவான் ஜின். கெம்பங்கான் - சை சீ தொகுதியில் நேற்றுக் காலை நடைபெற்ற சமூக சுகாதார விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர், சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்காதவர்களைப் பற்றித் தாம் கவலைப்படுவ தாகத் தெரிவித்தார். உடல் ஆரோக்கியத்தின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அந்த சுகாதார விழா நடத்தப்பட்டது.
"சில நேரங்களில் இந்த நடவடிக்கைகளில் அதே நபர்கள் பங்கேற்பதைக் காணலாம். மற்ற மூத்த குடிமக்களும் இவற்றில் பங்கேற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்," என்றார் அவர். சமூக நடவடிக்கைகளில் பங்கேற்காமல், தனித்து வாழ்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் நட்புக் கொண்டு அவர்களை வீட்டை வீட்டு வெளியே அழைத்து வர தகுந்த பங்காளிகளுடன் இணைந்து செயல்பட அரசாங்கம் திட்டமிடு வதாக அவர் தெரிவித்தார்.